`20 முறை முயற்சி செய்தும் வேகவில்லை' - இறைச்சி வேகவில்லை என்று கூறி போலீஸாருக்கு வந்த நூதன புகார்!

Mar 24, 2026 - 14:31
 0
`20 முறை முயற்சி செய்தும் வேகவில்லை' - இறைச்சி வேகவில்லை என்று கூறி போலீஸாருக்கு வந்த நூதன புகார்!

போலீஸாருக்கு எத்தனையோ விதமான நூதன புகார்கள் வருவதுண்டு. அதனையும் சமாளித்து தீர்த்து வைப்பதுதான் போலீஸாரின் வேலையாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் ஒருவர் கொண்டு வந்த புகாரை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி என்ற இடத்தில் வசிக்கும் சோதலா ஹாஜி என்பவர் ஒரு பாத்திரத்துடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் பாத்திரத்துடன் வந்தவுடன் என்னவென்று போலீஸார் கேட்டனர். அவர் உடனே தனது பாத்திரத்தை திறந்து உள்ளே இருக்கும் மட்டனை போலீஸாரிடம் காட்டினார்.

அதனை பார்த்ததும் நமக்குத்தான் மட்டன் கொண்டு வந்திருப்பதாக போலீஸார் நினைத்தனர். ஆனால் ஹாஜி அந்த மட்டனை போலீஸாரிடம் கொடுத்து இது வேகவேமாட்டேங்கிறது என்று புகார் கொடுத்தார்.

அவரின் புகாரை பார்த்து என்னடா இது புது பிரச்னையாக இருக்கிறது என்று கூறி அவரின் குறையை போலீஸார் கேட்டனர். ஹாஜி தனது புகாரில், மட்டன் கடையில் தலைக்கறி வாங்கியதாகவும், ஆனால் வீட்டில் அதனை சமைத்தபோது வேகவில்லை என்று தெரிவித்தார். 20 முறை வேகவைத்தும் மட்டன் வேகவில்லை என்று குற்றம் சாட்டினார்.

உடனே போலீஸ் அதிகாரி ஆனந்த் ராவ் அந்த மட்டனை விற்பனை செய்த வியாபாரியை அழைத்துவரும்படி கூறினார். வியாபாரி வந்தபோது அவரிடம் போலீஸார் பிரச்னையை தெரிவித்தனர். உடனே ஹாஜிக்கு கொடுத்த மட்டனுக்கு பதில் புதிய மட்டன் கொடுப்பதாக வியாபாரி தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. சில நேரங்களில் வயதான ஆடுகளின் இறைச்சி சரியாக வேகாது. அல்லது வேக அதிக நேரம் பிடிக்கும் என்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0