Toxic: `மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் சூழல்' யஷ்-ன் 'டாக்சிக்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு

Mar 4, 2026 - 12:00
 0
Toxic: `மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் சூழல்'   யஷ்-ன் 'டாக்சிக்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு

'கே.ஜி.எஃப்' புகழ் நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்சிக்' (Toxic: A Fairy Tale for Grown-ups) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்படுவதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து எழுதியுள்ள இந்தப் படத்தை வெங்கட் கே. நாராயணா மற்றும் யஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 19-ம் தேதி வெளியாவதாக இருந்தது. இருப்பினும், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் காரணமாக, தயாரிப்பு நிறுவனங்களான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க முடிவு செய்திருக்கின்றன.

Toxic
Toxic

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்கான சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் உருவாக்கிய ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இது, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் நெருக்கமாகும் என்ற நம்பிக்கையுடன் கட்டமைக்கப்பட்டள்ளது. பல வருட அர்ப்பணிப்பு பணிக்குப் பிறகு மார்ச் 19-ம் தேதி படத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.

இருப்பினும், குறிப்பாக மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழல் காரணமாக, பரந்த அளவிலான எங்கள் இலக்கு பாதிக்கும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனவே, எங்கள் பங்குதாரர்கள் மற்றும் எங்கள் பார்வையாளர்களின் நலனுக்காக, எங்கள் வெளியீட்டை மறு திட்டமிடும் கடினமான முடிவை எடுத்துள்ளோம். உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி, மேலும் உங்கள் தொடர்ச்சியான அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.

டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் இப்போது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஜூன் 4, 2026 அன்று வெளியிடப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0