"இந்த நிமிடம் வரை சூரி எங்களுக்கு உதவல" - 'பூ காய் கனி' பட இயக்குநர் வெற்றிவீரன் ஆதங்கம்
இயக்குநர் வெற்றிவீரன் 'பூ காய் கனி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, சந்தோஷ் நம்பிராஜன், மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மே.16) நடைபெற்றது.

அப்போது இயக்குநர் வெற்றிவீரன் நடிகர் சூரி குறித்து ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.
சூரி குறித்து பேசிய வெற்றிவீரன், "சூரிகிட்ட இந்த நேரத்தில் நான் ஒரு தகவலைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அவர் பல பேட்டிகளில் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் வெற்றிவீரன்தான் ஆரம்பக்காலத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்தார் என என்னைப் பற்றி பேசியிருக்கிறார்.
பட புரோமோஷனின்போது என்னைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். ஆனால் எனக்கான ஒரு வாய்ப்பை அமைத்து தரவில்லை.
வெற்றி பெற்ற ஒருவர், எனக்கான ஒரு வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கலாம். அதற்கான ஒரு சூழல் அமையவில்லையா எனத் தெரியவில்லை.
சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவர் மற்றொருவரைக் கைகொடுத்து தூக்கி விட்டிருக்க வேண்டும்.
இந்த நிமிடம் வரை சூரி அதை முயற்சி பண்ணவில்லை. அதனால் பெருமைக்காக போலி கட்டுக்கதைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.
சூரியின் வெற்றிக்குப் பின் 16 நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரைக் கூட கைதூக்கிவிடவில்லை. 'பூ காய் கனி' படம் மூலம் நிச்சயமாக நான் வெற்றி பெற்று இப்படி ஒரு உதவியே இனி தேவையில்லை என நான் சொல்வேன்" என்று பேசியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)