"இந்தக் குறை என்னால் கழிந்தது" - ஞானபீடம் விருது குறித்து கவிஞர் வைரமுத்து

Mar 15, 2026 - 11:32
 0
"இந்தக் குறை என்னால் கழிந்தது" - ஞானபீடம் விருது குறித்து கவிஞர் வைரமுத்து

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர் அகிலன் (1975), எழுத்தாளர் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெரும் மூன்றாவது தமிழர் கவிப்பேரரசு வைரமுத்து. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானபீட விருது வாங்கும் தமிழரான வைரமுத்துவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``ஞானபீட விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது.

வைரமுத்து
வைரமுத்து

இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்படும் ஞானபீட விருது பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை தமிழ்பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. இப்போதுதான் ஞானபீடம் தமிழ்க் கவிதைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்க் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது. என்னை வளர்த்த தமிழ்ச் சமூகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதைக் காணிக்கையாக்குகிறேன். இந்த விருது என் வயதைக் குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0