திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

Apr 21, 2026 - 12:02
 0
திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கோயில் திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை| சித்தரிப்பு படம்
கூட்டுப் பாலியல் வன்கொடுமை | சித்தரிப்பு படம்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அளிக்கிறது. இத்தகைய கொடூரங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முழுமையான சான்றாகும்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்பது இல்லாத ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், குற்றவாளிகளிடையே சட்டம் மற்றும் காவல்துறை மீதான பயமின்மை போன்றவற்றால் தமிழகம் இருண்ட படுகுழியில் வீழ்ந்திருக்கிறது.

இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்க இன்னும் சில காலம் எடுக்கும். தமிழகத்தை இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளியது இந்த திமுக ஆட்சிதான்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0