அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

Aug 07, 2026 - 14:01
0
அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது.

ஈரானும் சரி... அமெரிக்காவும் சரி... இப்போது வரை சளைத்ததாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன.

ஈரான் உச்சத் தலைவர் காமேனி இறந்துவிட்டால், ஈரானின் தலைமை மாறும்... ஈரானால் நீண்ட காலம் எதிர்த்து சண்டையிட முடியாது என்கிற பிளானில் தான் களத்தில் இறங்கின அமெரிக்காவும், இஸ்ரேலும்.

ஆனால், ஐந்து மாதங்கள் முடிந்தும் ஈரான் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டே தான் இருக்கின்றன. இன்னும் தாக்குதலுக்குத் தயார் என்கிற மோடிலேயே இருக்கிறது ஈரான்.

பீட் ஹெக்ஸெத்
பீட் ஹெக்ஸெத்

ஹெக்செத்தைக் கோபித்துக்கொண்ட ட்ரம்ப்?

ஆனால், அமெரிக்கா பக்கத்தில் இருந்து தான், 'அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கில் ஆயுதங்கள் குறைந்தவிட்டன' என்கிற சத்தங்கள் எட்டிப்பார்க்கின்றன.

சமீபத்தில், 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கேம்ப் டேவிட் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்திடம் கோபித்துக் கொண்டதாக கூறப்பட்டிருந்தது.

அதாவது அமெரிக்க ராணுவத்திடம் வழக்கமாக இருக்கும் ஆயுதங்களின் இருப்பு நினைத்ததை விட மிகவும் குறைந்திருக்கிறது என்று பீட் ஹெக்செத்தைச் சாடியிருக்கிறார் ட்ரம்ப்.

ஆனால், இந்தச் செய்தி உண்மையல்ல என்பதை மறுத்திருக்கிறது வெள்ளை மாளிகை.

மேலும், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், 'ட்ரம்பிற்கு ஹெக்செத் மீது முழு நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்திருக்கிறார்.

குறைந்துபோன... தீர்ந்துபோன ஆயுதங்கள்!

ஆனால், 'தி வாஷிங்டன் போஸ்ட்'-ன் செய்திப்படி, "ஈரான் போரின் தொடக்கத்திலேயே அமெரிக்கா 850-க்கும் மேற்பட்ட டோமாஹாக் (Tomahawk) க்ரூஸ் ஏவுகணைகள், 1,000-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் (Patriot) மற்றும் தாட் (THAAD) ஏவுகணைகள், மற்றும் 1,300-க்கும் மேற்பட்ட ராணுவ தந்திர பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்ளது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

ATACMS ரக தந்திர ஏவுகணைகளின் இருப்பே தற்போது அமெரிக்காவிடம் இல்லை".

என்ன தான் வெள்ளை மாளிகை 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தியை மறுத்தாலும், அது பெரியளவில் நம்பும்படியாக இல்லை.

பேக் அடிக்கும் ட்ரம்ப்

ஈரான் போர் தொடக்கத்தில், 'ஈரானை அழித்துவிடுவோம். அதற்கு ஓரிரு நாள்கள் தான் தேவை. ஈரானை அழித்துவிட்டோம்' என்றெல்லாம் பேசி வந்தார் ட்ரம்ப்.

ஆனால், ஈரான் இன்னும் போர்களத்தில் இருந்துகொண்டே தான் இருக்கிறது. பதிலடித் தாக்குதலை நடத்திக்கொண்டே தான் இருக்கிறது. அது பின்வாங்குவது மாதிரியே தெரியவில்லை.

ஆனால், ட்ரம்ப் இதுவரை இரண்டு முறை தான் அறிவித்திருந்த பெரியளவிலான தாக்குதலை ரத்து செய்திருக்கிறார். மேலும், அமைதிப் பேச்சுவார்த்தை... அமைதி... போர் நிறுத்தம் ஆகியவை அடிக்கடி அவரது வார்த்தைகளிலும், பதிவுகளிலும் வெளிபடுகிறது.

இதிலேயே அமெரிக்கா பக்கம் ஏதோ தடுமாற்றம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. முக்கியமாக, அரசியல் பார்வையாளர்கள், 'அமெரிக்காவிடம் ஆயுதங்கள் குறைந்து வருவதால் தான், ட்ரம்ப் விரைவில் போரை முடிக்கப் பார்க்கிறார்' என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஈரான் போர்
ஈரான் போர்

2025-ம் ஆண்டு அறிவித்த 'பரஸ்பர வரி'யையே இன்னும் ட்ரம்ப் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அந்த வரிகளுக்கு என்ன தான் நீதிமன்றங்கள் தடைகளை உருவாக்கினாலும், ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு சட்டத்தின் கீழ், ட்ரம்ப் மீண்டும் மீண்டும் புதுப்புது வரிகளைக் கொண்டுவந்துக் கொண்டே தான் இருக்கிறார்.

இதன் மூலம் ட்ரம்ப் அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார் என்பது தெரிகிறது. ஆனால், ஈரான் விஷயத்தில் அவ்வப்போது ட்ரம்ப் பேக் அடிப்பது அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User