பெரம்பலூர்: ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்... 4 பேர் பலியான சோகம்!

Sep 25, 2026 - 02:00
0
பெரம்பலூர்: ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்... 4 பேர் பலியான சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 38). இவரது நண்பர்கள், பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(வயது: 30), முதுகுளத்தூர் கார்த்திக் (வயது: 38), காளீஸ்வரன் (வயது: 25), ஓரி வயல் கண்ணதாசன் (வயது: 22), கார்த்தி மனைவி சூர்யா (வயது: 35), தேவிபட்டினம் ஜான் கென்னடி (வயது: 35), ரவி மனைவி சரண்யா (வயது: 23). இவர்கள் அனைவரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் கார்த்திக்கின் தம்பி ரஜினிகுமாரின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 7 பேரும் சென்னையில் இருந்து ஒரு காரில் ராமநாதபுரத்திற்கு சென்றனர். அங்கு திருமணம் முடிந்ததும், காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்களது கார் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, முன்னாள் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்த காரில் பயணம் செய்த பிரபாகரன், காளீஸ்வரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேரும் உயிருக்காக போராடி கொண்டிருந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பெரம்பலூர் நகர காவல்நிலைய போலீஸார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

car accident

இதில், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த, சூர்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்றவர்களான கண்ணதாசன், ஜான் கென்னடி, சரண்யா ஆகிய 3 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் தூத்துக்குடி மாவட்டம், நாசரேட் பகுதியை சேர்ந்த ஆம்னி பேருந்து டிரைவர் ராஜசீலன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆம்னி பேருந்தில் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User