`இப்போவரைக்கு தீபாவளி ரிலீஸ் படங்கள் உறுதி செய்யபடாததற்கு காரணம்.!' - நிலவரம் சொல்லும் தனஞ்செயன்

Aug 17, 2026 - 17:30
0
`இப்போவரைக்கு தீபாவளி ரிலீஸ் படங்கள் உறுதி செய்யபடாததற்கு காரணம்.!' - நிலவரம் சொல்லும் தனஞ்செயன்

இந்தாண்டில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகக்கூடிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூர்யா படம் வெளியான அதே தேதியில் விஷால் படம் வெளியாகிறது. அடுத்து 'சர்தார்2', 'மண்டாடி', 'டிமான்டி காலனி' 'மீசையை முறுக்கு2, 'ஹாய்', 'கராத்தே பாபு', 'டாக்ஸிக்', சத்யவான் சாவித்ரி', 'ஏழுகடல் ஏழுமலை', 'ராவடி', 'மை டியர் சிஸ்டர்', 'இரண்டாம் வானம்' என பல படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள்.

இதில் நன்கு தெரிந்த ஹீரோ,ஹீரோயின்களின் படங்களே ஒரே தேதியில் ரிலீஸுக்கு போட்டி போடுவதால், திரையரங்குகள் திணறவிருக்கின்றன. ''இப்படி அவசர அவசரமாக ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன?'' என்ற கேள்வியை தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், ரைட்டருமான ஜி.தனஞ்செயனிடம் கேட்டோம். தமிழ் சினிமாவின் நிலவரத்தை ஒளிவு மறைவின்றி சொன்னார்.

ஹாய் படத்தில்

``சினிமாவுல இன்னிக்கு காலகட்டம் ரொம்ப டஃப்பா இருக்கு. தனிப்பட்ட ஒரு தயாரிப்பாளர் கையில் சினிமா கிடையாது. ஃபைரஸியும் ஒரு பிரச்சனையா இருக்கு. படங்களுக்கு சாட்டிலைட், டிஜிட்டல் பிசினஸும் குறைஞ்சிடுச்சு. அவங்களுடைய ஷெட்யூல் பார்க்க வேண்டியது இருக்கு. பண்டிகை நாட்களா..? போட்டி எப்படியிருக்கு? இப்படி பல விஷயங்களை கவனத்துல எடுத்துக்க வேண்டியிருக்குது.

கடந்த மார்ச், ஏப்ரலில் 'ஜன நாயகன்' வரப்போகுதுனு தேதி தெரியாமல் ஷெட்யூல் பண்ணமுடியாமல் இருந்ததால பல படங்களின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது. முன்னாடி ஒரு தயாரிப்பாளர்னா தீபாவளி மாதிரி ஒரு பண்டிகை வந்தால், எத்தனை படங்கள் வரப்போகுதுனு தான் பார்ப்பாங்க. ஆனா, இன்னிக்கு அப்படியில்ல. படத்தை யார் வாங்கியிருக்காங்க? அவங்களுடைய தேதி எப்போ..? இப்படி எல்லாமும் கவனிக்க வேண்டியிருக்குது. எல்லா படங்களும் ஒண்ணா சேர்ந்துட்டாதால 'சாக்கோ பிளாக்' ஆகிடுச்சு. அதாவது நெருக்கடியான சூழல் ஆகிடுச்சு.

எங்கள் அரசன்!

சாட்டிலைட் காரங்களும் சரி, டிஜிட்டல் காரங்களும் சரி அவங்க வாங்குற படங்கள் எப்போ ரிலீஸ் ஆனால், அவங்களுக்கு சரியா இருக்கும்ஙக்ற கணக்கோடுதான் படத்தை வாங்குறாங்க. கார்த்தியோட 'சர்தார் 2'வை சோனி சேனல்ல வாங்கியிருக்காங்க. அவங்க வாங்கினதும் 'நீங்க செப்டம்பர்ல இந்த தேதியில் வாங்க'னு ஒரு தேதியை சொன்னதால 'சர்தார் 2' அந்த தேதியில் வருது. அதை போல ஜீ சேனல்ல 'டிமான்டி காலனி3' வாங்கியிருக்காங்க. நயன்தாராவோட 'ஹாய்' படத்தை வேறொரு சேனல் வாங்கியிருக்காங்க. இப்படி நல்ல விலை கொடுத்து சாட்டிலைட், டிஜிட்டல் வாங்கும் போது அவங்க சொல்ற தேதியில் ரிலீஸ் செய்வதில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கத்தானே செய்யும்.

தனஞ்செயன்

அதைப் போல ரஜினியின் 'ஜெயிலர் 2'வும், தனுஷின் 'ஓம்' படமும் அடுத்தடுத்த தேதியில் வரப் போகுதுனு அறிவிச்சிட்டாங்க.. ஆனா, இன்னிக்கு வரை அவங்க யார் முதல்ல வரப்போறாங்கனு உறுதிப்படுத்தாமல் இருக்காங்க. அதுக்கு காரணம், சாட்டிலைட், டிஜிட்டல் பிசினஸ். அவங்க தான் முடிவு செய்யணும். அதே சமயம், பண்டிகை காலங்கள், விடுமுறை தினங்களையும் கவனத்துல எடுத்துக்க வேண்டியிருக்குது. ஆயுத பூஜைக்கு 5 நாட்கள் விடுமுறை வர்றதால, அந்த தேதியில் படம் வந்தால் வசூலை அள்ளமுடியும். இப்போ வரைக்கும் தீபாவளி ரிலீஸ்னு எதுவும் உறுதியாகலை. சிம்புவோட 'அரசன்' படமும் தள்ளிப்போகுது. இந்த முறை தீபாவளி நவம்பர் 7ல் வர்றதால, மழை சீசனாக இருக்கும்னு எல்லோரும் ரிலீஸ் செய்ய தயங்கத்துனால முன்னாடியே அக்டோபர் மாசம் வந்திடுறாங்க. ஆயுதபூஜைக்கு 5 நாட்கள் விடுமுறையும் இருக்கறதால இந்த டைம்ல பெரிய படத்தை ரிலீஸ் செய்திடலாம்னு முன்கூட்டியே வர்றாங்க''. என்கிறார் தனஞ்செயன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User