``இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம் இணைந்து செயல்பட வேண்டும்"- நேபாள அமைச்சர்

Aug 27, 2026 - 15:00
0
``இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம் இணைந்து செயல்பட வேண்டும்"- நேபாள அமைச்சர்

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அதில் 133 பேர் இந்தியர்கள்.

நேற்று நடந்த இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் இணைந்து செயல்பட வேண்டும் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் NDTV உச்சிமாநாட்டில் இன்று பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது...

“இமயமலையில் உருகுவது கடலின் நீர்மட்டத்தை உயர்த்துகிறது. நேற்றைய தினம் நமது கண்ணெதிரே நேரலையாக நாம் கண்டதும் அதைத்தான்.

இமய மலை
இமய மலை

சீனா, நேபாளம், இந்தியா, பூட்டான் என நாம் அனைவரும் சூழலியலால் ஒன்றுபட்டிருக்கிறோம். நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இந்த இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் அடங்கியுள்ளது. எனவே நாம் ஒன்றிணைய வேண்டும்.

காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில், இமயமலைப் பிராந்தியம் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும்.

இந்தப் பனிப்பாறைகள் உருகி, தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அது இதுபோன்று ஒரு பேரழிவாக மாறுவதோடு மட்டுமல்லாமல், இறுதியில் நமது பிராந்தியத்தில் உள்ள சுமார் 200 கோடி மக்களின் நன்னீர் ஆதாரத்தையும் பாதிக்கும்.

எனவே, சூழலியல் ரீதியாக வரவிருக்கும் இந்த நாகரிக ஆபத்தை எதிர்கொள்ள நாம் அனைவரும் எப்படி ஒன்றுபடப் போகிறோம், எப்படி ஒன்றிணைந்து இதற்கான தீர்வைக் காணப்போகிறோம் என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User