ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜெண்டின வீரர்! - போட்டிக்கு பின் ஆவேச சண்டை!

Jul 20, 2026 - 12:01
0
ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜெண்டின வீரர்! - போட்டிக்கு பின் ஆவேச சண்டை!

கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அர்ஜெண்டினாவை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Fight after World Cup Final
Fight after World Cup Final

நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. 106 வது நிமிடத்தில் டார்ரஸ் ஸ்பெயின் அணிக்காக ஒரு கோலை அடித்து லீட் எடுக்க வைத்தார். இந்த பின்னடைவிலிருந்து அர்ஜெண்டினா அணியால் மீளவே முடியவில்லை.

கூடுதல் நேரத்தின் முடிவிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. தோல்வியால் அர்ஜெண்டினா வீரர்கள் விரக்தியடைந்தனர். இந்நிலையில்தான் ஸ்பெயின் வீரர்கள் ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அர்ஜெண்டின வீரர் லியாண்ட்ரோ பாரடீஸூக்கும் ஸ்பெயின் வீரர் கார்சியாவுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது. பாரடீஸ் கார்சியாவின் கழுத்தை ஆவேசமாக பிடிக்க மோதல் முற்றியது. சண்டையை விலக்கி வைக்க வந்த ஸ்பெய்ன் சப் வீரர் காபிவியையும் கீழே தள்ளி பாரடீஸ் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் குழும, அர்ஜெண்டின பயிற்சியாளர் ஸ்கலோனி இருவரையும் பிரித்துவிட்டார்.

Fight After WorldCup Final
Fight after WorldCup Final

இரு அணியின் வீரர்களும் சண்டையிட்டு கொண்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User