ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸிற்கு கொடுத்த தவெக; இப்போது பாஜகவிற்கு 113 MPs, காங்கிரஸிற்கு 30 MPs| Live Updates
ராஜ்ய சபாவில் காங்கிரஸிற்கு 30 எம்.பிக்கள்!
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜயைச் சந்தித்தார் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.
இந்தச் சந்திப்பில் தற்போது காலியாக உள்ள ஒரு ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸிற்கு தர வேண்டும் என்று கிரிஷ் சோடங்கர் கோரிக்கை வைத்திருந்தார்.
இதை ஏற்று, விஜயும் அந்தச் சீட்டை காங்கிரஸிற்கே தந்துள்ளார்.
ஆக, இப்போது ராஜ்ய சபாவில் காங்கிரஸின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. பாஜக எம்.பிகளின் எண்ணிக்கை 113 என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் அமைச்சரவைக் கூட்டம்
தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள், சட்ட ஒழுங்கு போன்ற விவகாரங்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் இன்றைய அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ல் ஃபாலோ பண்ணுங்க மக்களே!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)