தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: திமுக Vs அதிமுக - அதிகபட்ச தொகுதிகளை வென்றது எப்போது? | Vote Vibes

Apr 8, 2026 - 17:01
 0
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: திமுக Vs அதிமுக - அதிகபட்ச தொகுதிகளை வென்றது எப்போது? | Vote Vibes

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பல கட்சிகள் தேர்தல் களத்தில் கால் பதித்திருந்தாலும், தமிழகத்தின் பிரதான கட்சிகளாக விளங்குவது திமுக-வும், அதிமுக-வும் தான்.

இந்த இரு பெரும் கட்சிகளும் எந்தத் தேர்தலில் அதிக மற்றும் குறைவான தொகுதிகளை வென்றிருக்கின்றன என்று பார்ப்போம்.

கலைஞர்
கலைஞர்

திமுக வென்ற அதிகபட்ச தொகுதிகள்

திமுக-வைப் பொறுத்தவரை 1971-ல் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தார்கள்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க சந்தித்த முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில், 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றிருக்கிறது திமுக.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் திமுக அதிகபட்ச தொகுதிகளை வென்றது இந்தத் தேர்தலில்தான்.

படுதோல்வியை தழுவிய திமுக

அதேபோல 1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டே தொகுதிகளில்தான் வென்றிருக்கிறது.

அதாவது துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி மட்டுமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

ராஜுவ் காந்தி மறைவிற்கு பிறகு நடந்தத் தேர்தல் என்பதாலேயே திமுக இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. குறைவானத் தொகுதிகளை திமுக வென்றது இந்தத் தேர்தலில் தான்.

திமுக vs அதிமுக
திமுக vs அதிமுக

அதிமுக வென்ற அதிகபட்ச தொகுதிகள்

அதிமுக-வை பொறுத்தவரை திமுக படுதோல்வி அடைந்த 1991 தேர்தலில் தான் அதிமுக அதிக தொகுதிகளை வென்றிருக்கிறது.

அந்தத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. ராஜீவ் காந்தி இறந்த அனுதாப அலையிலேயே அதிமுக அதிக தொகுதிகளை வென்றதாகக் கூறப்படுகிறது.

அதாவது அந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 164 தொகுதிகளை வென்றது தான் அவர்களின் அதிகபட்ச ஸ்கோர்.

அதேபோல அதிமுக குறைவானத் தொகுதிகளை வென்றது 1996-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதாவே தோல்வியைச் சந்தித்த தேர்தல்

வெறும் 4 தொகுதிகளில் மட்டும் அதிமுக வென்றது. குறிப்பாக வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம், வாச்சாத்தி வன்கொடுமை, கும்பகோண மகாமக விபத்து போன்ற ஜெயலலிதா மீது நிறைய புகார்கள் எழுந்ததுதான் அந்தத் தோல்விக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக பர்கூர் தொகுதியில் நின்ற ஜெயலலிதாவையே அந்தத் தேர்தலில் மக்கள் படுதோல்வியைச் சந்திக்க வைத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0