பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை - கல்விக்குக் கரம்கொடுக்கும் வடிவேல் கிராக்கர்ஸ்!

Jun 23, 2026 - 14:32
0
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை - கல்விக்குக் கரம்கொடுக்கும் வடிவேல் கிராக்கர்ஸ்!

1945 இல் துவங்கப்பட்ட சிவகாசியின் மிக பிரபலமான பட்டாசு நிறுவனமான வடிவேல் கிராக்கர்ஸ் ( vadivel crackers ) இல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவத்தின் மூலம் 5000க்கும் மேற்பட்டோர் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.

மேலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வடிவேல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரின் விருப்பத்திற்கு இணங்க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களை அழைத்து கௌரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி வருகின்றனர். 

 vadivel crackers
vadivel crackers

கல்வியே தனிமனித ஒழுக்கத்தை வளர்க்கும் , கல்வியே தனிமனித முன்னேற்றத்திற்கு அடிப்படை ஒன்றாகும், என்பதை முழு மனதாக ஏற்றுக்கொண்ட மேலாண்மை இயக்குனர் ஆறுமுகசாமி தங்களது பணியாளர்களின் குழந்தைகளின் கல்வியையும் அக்கறையுடன் கவனித்து வந்தார்.

அவரைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளான வசந்த விகாஸ் ஆறுமுகசாமி அவர்களும் அதிபன் ஆறுமுகசாமி அவர்களும் தந்தையின் வழியை பின்பற்றி தமது நிறுவனத்தின் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதைத் தவிர ஒவ்வொரு வருடமும் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 12 மாணவர்களுக்கு சிறப்பு பதக்கங்களும் கல்வி உதவித்தொகையும் வழங்கி கௌரவித்தனர். 

 vadivel crackers
vadivel crackers

இவ்விழாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில்

சங்கீதா - 419,

ஜெயகணேஷ் - 419 ,

கிருத்திஸ் - 430 ,

வந்தனா - 450,

ஆனந்த ஸ்ருதி - 476 ,

கனிஷ்க - 459 ,

லத்திகா - 469,

ரம்யா- 454 ,

மல்லிகா - 464 ,

பூபதி - 402 ,

புவனேஸ்வரன் - 462 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில்

சூரிய தேவி 489 மதிப்பெண்களும் பெற்று தங்கள் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவ செல்வங்களை வடிவேல் பட்டாசு நிறுவனத்தின் இயக்குனர்கள் கௌரவித்தனர்.

இவ்விழாவின் போது இயக்குனர் ஆறுமுகம் சாமி அவர்கள் இயற்கையின் முக்கியத்துவத்தையும் அதை எவ்வாறு பேணுவது என்பது பற்றியும் மாணவர்களிடம் எடுத்துக் கூறினார் அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சில மரக்கன்றுகளையும் பரிசாக வழங்கி ஊக்குவித்தார்.

vadivel crackers
vadivel crackers

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User