சேலம்: பட்டப்பகலில் விரட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்... முன்விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை!

Oct 26, 2026 - 17:30
0
சேலம்: பட்டப்பகலில் விரட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்... முன்விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரௌடி டேவிட் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "இன்று காலை 9 மணியளவில் டேவிட் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், புதுரோடு மேம்பாலம் அருகே டேவிட்டை வழிமறித்துள்ளனர். தப்பிக்க முயன்று பாலத்தைத் தாண்டி ஓடிய டேவிட், எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி கீழே விழுந்தபோது அக்கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டேவிட்

கடந்த மாதம் மத்தியப் பொருளாதாரக் குற்றப்பிரிவில் ₹65 லட்சம் மோசடி செய்த புகாரில் டேவிட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்த நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். பணப் பரிவர்த்தனை மற்றும் மோசடி பகையால் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்திருக்கலாம்‌. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டேவிட்டிற்கு, உள்ளூர் ரௌடி கும்பல்களுடன் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி மற்றும் தொழில்முறை முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். தப்பியோடிய 5 பேர் கொண்ட கொலைக் கும்பலைப் பிடிக்க மாநகரக் காவல் துணை ஆணையாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User