`கரூர்ல போட்டுருந்தால்...’ - முதல்வர் குறித்து மிரட்டல் பேச்சு; திமுக கவுன்சிலரைப் பிடிக்க தீவிரம்!

Oct 27, 2026 - 16:00
0
`கரூர்ல போட்டுருந்தால்...’ - முதல்வர் குறித்து மிரட்டல் பேச்சு; திமுக கவுன்சிலரைப் பிடிக்க தீவிரம்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

போலீஸாரின் வேனில் அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டபோது, வெளியில் நின்றுகொண்டிருந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் `தலைவரே... அன்னைக்கே அவனை கரூர்ல போட்டுருந்தால் இன்னைக்கு இந்த நிலைமை வந்துருக்குமா..’ என்று சர்ச்சைக்குரிய வகையில் ஆவேசமாக கத்தி கூச்சலிட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அன்பில் மகேஷுடன் டீட்டா சரவணன்

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், கொலை மிரட்டல் பேச்சிலும் ஈடுபட்ட அந்த நபர் மீது புழல் போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து, அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்யவும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

விசாரணையில், வேலூர் மாநகராட்சியின் 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன் என்பது தெரியவந்தது. காட்பாடி திருநகர் சிந்து கார்டனில் வசித்து வரும் டீட்டா சரவணன், தி.மு.க-வில் வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்கிறார். அன்பில் மகேஸின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.

இந்த நிலையில்தான் டீட்டா சரவணனை விரைந்து கைது செய்வதற்காக சென்னையில் இருந்து 3 தனிப்படை போலீஸார் வேலூருக்கு விரைந்திருக்கின்றனர். இதனிடையே, டீட்டா சரவணன் கைதுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார். அவர் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User