'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?

Sep 26, 2026 - 13:00
0
'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் ஆனந்துக்கு தவெகவில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

CM Vijay
CM Vijay

இதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், 'திமுகவில் ஜெகத்ரட்சகனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என அவரது குடும்பம் நினைக்கிறது. புதுச்சேரி திமுகவை கையிலெடுத்து அங்கே முதல்வர் ஆகிவிட வேண்டுமென ஜெகத்ரட்சகன் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

ஆனால், திமுக தலைமை அதில் விருப்பமே காட்டவில்லை. மேலும், கட்சிக்குள்ளும் ஜெகத்ரட்சகனின் வாய்ஸூக்கு மரியாதை இல்லை என நினைக்கிறார்கள். அதனால்தான் அவர் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவுக்கு வரலாம் என எடுத்த முடிவுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். வைட்டமின்களை இறக்கி தவெகவில் முக்கிய அந்தஸ்துக்கு மகனை கொண்டு வந்துவிடலாம் என அவரும் நம்புகிறார். அதனால்தான் முதல்வருக்கு நெருக்கமான சில பவர் செண்டர்களின் வட்டத்தை தொடர்புகொண்டு சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார்.

ஜெகத்ரட்சகன் மகன்
ஜெகத்ரட்சகன் மகன்

முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி உங்களுடன் நீண்ட காலம் இணைந்து பயணிக்க வேண்டும் எனக் கூறினார். வைட்டமின்களை இறக்க தயாராக இருந்தும் சந்தீப்புக்கு எந்த முக்கிய பொறுப்புகளையும் தலைமை வழங்காமல் இருந்தது. இந்நிலையில்தான் இப்போது அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார்கள். இடைத்தேர்தல் சமயத்தில் இந்தப் பொறுப்பை வழங்கியதிலும் ஒரு கணக்கு இருக்கிறது. ஜெகத்ரட்சகன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அவரின் மகனுக்கு முக்கியப் பொறுப்பை வழங்குவதன் மூலம் கட்சிக்குள் அந்த சமூக மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்கிற பிம்பத்தை உருவாக்க முடியும். இது மதுராந்தகத்தில் தங்களுக்கு கைகொடுக்கலாம் என தலைமை நம்புகிறது' என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User