'அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்?' ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்
ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடத்திய தாக்குதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்க ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் செல்ல முடியாதபடி அமெரிக்க கடற்படை தடையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஈரான் எண்ணெய் கப்பல்கள் செல்லக்கூடிய ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா கடலில் தடையை ஏற்படுத்தி இருப்பதால் ஈரான் தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாமல் இருக்கிறது.
ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் தற்போது தாக்குதலை நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு ஈரான் குழு சென்று இருந்தது. அக்குழுவினர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், போரை முடிவுக்கு கொண்டு வந்து ஹார்மூஸ் ஜலசந்தியை முழுமையாக போக்குவரத்திற்கு திறந்துவிட 7 நிபந்தனைகளை ஈரான் விதித்தது.
அதோடு உடனடியாக 7 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கவும் சம்மதிப்பதாக ஈரான் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அளித்த பேட்டியில், "ஈரான் கத்தார் மூலம் அமெரிக்காவிடம் ஏழு நாட்களுக்கான ஒரு திட்டத்தைத் தெரிவித்துள்ளது. தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அந்த நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, ஏழு நாட்களுக்குள் இயல்பான கடல்வழிப் போக்குவரத்தை தொடங்க முடியும். இப்போது முடிவு அமெரிக்காவின் கையில் உள்ளது.
கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களை ஈரான் ஏற்காது. மேலும் அழுத்தத்திற்குப் பணிந்து தனது இறையாண்மை உரிமைகளை ஈரான் விட்டுக்கொடுக்காது," என்று அவர் கூறினார்.
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கி, எண்ணெய் மீதான தடைகளை விலக்கி, லெபனான் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஏழு நாட்களுக்குள் மீண்டும் தொடங்கவும் தயாராக இருப்பதாக ஈரான் கூறியது.
ஆனால் ஈரானின் இந்த அமைதி ஒப்பந்த திட்டத்தை டொனால்டு ட்ரம்ப அரசு நிராகரித்துள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாது என்றும், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் நிறைவேற்றும் என்று நம்பிக்கை இல்லை என்றும், மீண்டும் குண்டுவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதோடு ஹார்முஸ் ஜலசந்தியை வட்டமிட்டு "ட்ரம்ப் ஜலசந்தி" என்று பெயரிடப்பட்ட வரைபடத்தின் ஒரு படத்தை அவர் தனது சமூக தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப்பதட்டம் தொற்றிக்கொண்டுள்ளது. மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, கடந்த ஜூன் 17ம் தேதி 14 அம்ச ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்காவும், ஈரானும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கும், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் ஜூலை 8ம் தேதி முடிவுக்கு வந்தது. ஆரம்பத்தில் அமெரிக்காவுடன் இணந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இப்போது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டது. இப்போது அமெரிக்கா மட்டும் இப்போரை நடத்தி வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)