"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" - என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?

Sep 26, 2026 - 19:00
0
"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" - என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், "நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தன். VIP 2 இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கும் போது திட்டு வாங்கினேன். சில சமயம் எனக்கே தோன்றும் நான் அமைச்சர் ஆகிட்டனா? நான் சினிமா துறைக்கு விருது வழங்குகிறேனா? என்று... இந்த வாய்ப்பைக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி.

சினிமா துறை மேல் அரசுக்கு தனி கவனம் உள்ளது. உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சர் ஆக உள்ளார். தவெக அரசு ஆட்சியில் உள்ளது. இனி தமிழக அரசு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 'மண்டாடி', 'மொத ராத்திரி' படங்களைக் கொண்டாடுகிறார்கள். 'டோரதி' படம் பார்த்தேன். உலுக்கி விட்டது. எல்லா படங்களும் மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையைத் தருகிறது.

டோரதி
டோரதி

தமிழ் சினிமாக்கவுக்கான அரசு OTT தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும், இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து பேசி முடிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User