Raptee HV T30: 'கார் பாதி, பைக் பாதி' - ராப்டீ நிறுவனத்தின் HV வாகனம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

Mar 4, 2026 - 16:30
 0
Raptee HV T30: 'கார் பாதி, பைக் பாதி' - ராப்டீ நிறுவனத்தின் HV வாகனம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

'மனிதன் பாதி மிருகம் பாதி' என்பதுபோல 'கார் பாதி பைக் பாதி' சேர்ந்து செய்த கலவை ஒன்று உள்ளது.

அதன் பெயர் அனேகமாக உங்களுக்கே தெரிந்திருக்கும். அதன் பெயர் ராப்டீ HV.

HV எனும் எழுத்துக்கு High-Voltage என அர்த்தம். இது ஒரு எலெக்ட்ரிக் பைக்தான்.

ஆனால், சாதாரணன எலெக்ட்ரிக் பைக் அல்ல. 7 ஆண்டுகள் கருவில் (R&D) வளர்ந்து சாலையை அலங்கரிக்க வந்திருக்கும் இதுதான் CCS2 தொழில்நுட்பம் கொண்ட முதல் பைக்.

அதாவது எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் அதே தொழில்நுட்பத்தில் இந்த பைக்கையும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

பைக்கை வாங்கிய வாடிக்கையாளர்
பைக்கை வாங்கிய வாடிக்கையாளர்

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராப்டீ நிறுவனம் T30 எனும் தனது முதல் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்தது. கருவில் மட்டுமே இருந்த ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு அது.

இதைப் பற்றி ராப்டீ நிறுவனத்தின் CEO தினேஷ் அர்ஜுனிடம் பேசினோம், "எங்கள் 7 ஆண்டுக்கால உழைப்பை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்திலேயே பல வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்பின்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறும் நாள் இது. விரைவில் இந்தியா முழுவதும் உள்ள சாலைகளை அலங்கரிக்கும்" என்றார்.

"இந்த பைக்கை முதல்முறை பார்த்தபோதே வாங்கவேண்டும் என முடிவுசெய்துவிட்டேன்.

டெஸ்ட் ட்ரைவும் செய்து பார்த்தேன். பர்ஃபாமன்ஸ், டிசைன், ஸ்பீடு என எல்லாமே இந்த பைக்கில் பிடித்துபோய்விட்டது. உடனே புக் செய்துவிட்டேன். இப்போது முதல் டெலிவரியில் இந்த பைக்கைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார் ஒரு வாடிக்கையாளர். 

ஏற்கனவே, இந்த ராப்டீ. HV T30-ல் 19 நாட்களில் 7,530 கிமீ தூரம் பயணம் மேற்கொண்டு ஆல் இந்தியா ரைடை முடித்துள்ளார், சென்னை MCC கல்லூரியின் துணைப் பேராசிரியர் பால மணிகண்டன்.

ராப்டீ HV
ராப்டீ HV

இந்த பைக்கின் அமைப்பு அதிசய தரத்தில் உள்ளதாக 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்தது.

8 வருட பேட்டரி வாரன்டியும், 3 வருட வாகன வாரன்டியுடனும் இந்த T30 பைக்குகள் 10 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.39 லட்சம். 

'இவ்வளவு விலையா!' என ஆச்சரியப்படாதீர்கள். முதல் பேட்ஜ் டெலிவரி முடிந்து இரண்டாம் பேட்ஜ் டெலிவரிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன T30 பைக்குகள். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0