Rajinikanth: "அந்த அனுபவம் என் ஈகோவை உடைத்துவிட்டது!; அதுவே சுப்ரீம் ஸ்டார்டம்!" - ரஜினி கலகல

May 13, 2026 - 12:02
0
Rajinikanth: "அந்த அனுபவம் என் ஈகோவை உடைத்துவிட்டது!; அதுவே சுப்ரீம் ஸ்டார்டம்!" - ரஜினி கலகல

நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டார். அவர் நடிக்கவிருக்கும் படங்களும் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கின்றன. கூடிய விரைவில் அப்படங்களும் படப்பிடிப்பிற்கு டேக் ஆஃப் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பினார் ரஜினிகாந்த். அங்கு, குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆர்ட் ஆஃப் லிவிங் ஆசிரமத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு ஆசிரமம் பற்றியும் அங்கு உண்டான ஒரு நகைச்சுவையான அனுபவம் பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.

ஜெயிலர் - ரஜினி
ஜெயிலர் - ரஜினி

அங்கு, "எங்கு பார்த்தாலும் பசுமை, ஏரி, மக்கள் என இந்த ஆசிரமத்தின் இடமே ரம்மியமாக இருந்தது. மக்களின் முகத்தில் புன்னகை தெரிந்தது. யானை, குதிரைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பசுக்கள் இருந்தன.

அதில் ஒரு குதிரையின் பெயர் 'ரஜினி'!" என நகைச்சுவையோடு தொடர்ந்தவர், "நான் ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தங்கலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டு வந்தேன். ஆனால் கடைசியில் 15 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டேன்.

அப்போது குருதேவ் என்னிடம், ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கிறீர்களா என்று கேட்டார். அப்போது மக்கள் என்னைப் பார்த்ததும் சூழ்ந்துவிடுவார்கள், ஆட்டோகிராப், போட்டோ கேட்பார்கள், அதனால் ஆசிரமத்திற்குச் சிக்கல் வரும் என்று யோசித்தேன்.

அங்கிருந்த மக்கள் என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நான் நினைத்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரையும் அங்கு நான் பார்த்தேன். நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தார்கள்.

ஆனால், அங்கிருந்த ஒருவர்கூட என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. புகைப்படம், ஆட்டோகிராப் இதையெல்லாம் விடுங்கள்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஒருவர்கூட என்னைப் பார்க்கவோ பேசவோ இல்லை. நான் தாமாகச் சென்று கையை அசைத்தேன். ஆனால் யாரும் என்னைக் கவனிக்கவில்லை. நான் எத்தனையோ அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் சந்தித்திருக்கிறேன்.

ஆனால் இந்த அனுபவம் என் ஈகோவை உடைத்துவிட்டது. திரையுலக ஸ்டார்டம் என்பது வந்து போகக்கூடியது. அது கொஞ்சக் காலத்திற்குத்தான் நிலைக்கும்.

ஆனால், இந்த ஆன்மிக ஸ்டார்டம் தான் உண்மையான 'சுப்ரீம் ஸ்டார்டம்'. மரணத்திற்குப் பிறகும் கூட இந்த ஸ்டார்டம் அப்படியே இருக்கும். சொல்லப்போனால், அது வளர்ந்துகொண்டே தான் இருக்கும்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User