நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாது" - கரீனா கபூர்

Jul 24, 2026 - 13:01
0
நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாது" - கரீனா கபூர்

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் இதைப் பற்றி சில நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இனிமேலும் இதை அமைதியாகக் கடந்து போக முடியாது. தங்கள் குரலைக் கேட்கக் கோரும் ஏராளமான இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது... புறக்கணிக்கப்படவும் கூடாது.

ஒரு குழந்தைக்கு கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. நம்பிக்கையைத் தருகிறது. இன்றைய நாளை விட நாளை சிறப்பானதாக இருக்கும் என்ற சான்றினை அவர்களின் குடும்பங்களுக்குத் தருகிறது. நேர்மை, உழைப்பு மற்றும் தகுதிக்கு மதிப்பில்லை என்று அவர்கள் சந்தேகிக்கத் தொடங்கும் கணமே, நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள்.

கரீனா கபூர்
கரீனா கபூர்

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும், சமமான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பக்கூடிய ஒரு அமைப்பு அவர்களுக்குத் தேவை. ஒரு தலைமுறையே தங்கள் எதிர்காலத்தைப் பற்றி ஒரே குரலில் பேசும்போது, அதைக் கேட்பது நாம் காட்டும் மரியாதை அல்ல; அது நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User