பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; 120- க்கும் மேற்பட்டோர் காயம்

Jul 16, 2026 - 21:32
0
பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; 120- க்கும் மேற்பட்டோர் காயம்

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று (ஜுலை.16) காலை மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்த பிரமாண்ட ஆன்மிக விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்டிருக்கின்றனர்.

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை
பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

பக்தர்களின் வருகையை முன்னிட்டு அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், கோயிலுக்கு வெளியே திடீரென பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

மேலும் 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவிந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User