குருப்பெயர்ச்சி 2026 : `எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு; கவனம் தேவை' - மேஷ ராசிக்கு எப்படி?
உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) வருகிற ஜூன் 2 முதல் 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். பலவகை களிலும் ஆதாயம் பெறப்போகும் காலம் இது. சவால்கள் உண்டு என்றாலும் நிறைவில் வெற்றி நிச்சயமே.
1. இந்தக் குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 8, 10 மற்றும் 12-ம் இடங்கள் குருபார்வையைப் பெறுகின்றன. ஆகவே, எல்லா வகையிலும் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களால் லாபம் ஏற்படும்.
2. உத்தியோகத்தில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் தேடி வந்து உங்களைச் சந்தோஷப்படுத்தும். பெரிய நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
3. தொழில், சுபகாரியங்கள், அரசாங்க அனுமதிப் பெறுவது போன்ற எல்லா வகையிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். அதேபோல் எதிர்பாராத பணவரவும் உண்டு. எனினும் திட்டமிட்டு சேமிக்கப் பாருங்கள். சிற்சில தருணங்களில் தடைகள், மறைமுக எதிர்ப்புகள் வந்தாலும் எல்லாவற்றையும் முறியடித்து முன்னேறு வீர்கள்.
4. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செலவுகள், அலைச்சல் உண்டாகலாம். செலவுகளைச் சுபச்செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வீட்டில் சுபநிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். அதேநேரம் விலையுயர்ந்த பொருள்கள், ஆவணங்களைப் பாதுகாப்பதில் கவனம் தேவை.

5. இந்த ராசியைச் சேர்ந்த அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல், சோர்வு, காரியத் தடைகள் ஏற்படும். பரணி நட்சத்திரக் காரர்களுக்குப் பணவரவு திருப்திகரமாக இருக்கும். புது வேலை கிடைக்கும்.
6. வியாபாரத்தில், எதிர்பார்த்த லாபம் வரும். புது விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உங்களுக்கு, மருந்து, உணவு, கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. எனினும் கூட்டுத்தொழிலில், பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்படுவார்கள்;
7. உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். எனினும் பொறுப்புகளும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். சில தருணங்களில் மேலதிகாரியுடன் கருத்துமோதல்கள் உண்டாகலாம். எனினும் 10-ம் இடம் குருபார்வையைப் பெறுவதால், சகலவிதமான சவால்களையும் சமாளித்து மீள்வீர்கள். சிலருக்குத் திடீர் இடமாற்றம் உண்டு.
8. கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத் துறையினர், வீண் வதந்திகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.
9. இந்தக் குருப்பெயர்ச்சியில் உங்கள் உடல்நலனிலும் அம்மாவின் உடல்நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். அதேபோல், நீர், நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள்.
10. வரவில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில் செலவு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். சேமிப்புகள் கரைய வாய்ப்பு உண்டு. நெருங்கிய நண்பர்கள், உறவுகளை அரவணைத்துச் செல்வது முக்கியம்.
11. பூர்வீகச் சொத்தைப் பாதுகாப்பதன் பொருட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வீடு-மனை வாங்குவதிலும், விற்பதிலும் கவனமாகச் செயல்படவேண்டும். அதேபோல், வெளிவட்டாரத்தில் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காதீர்கள்.
Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27
ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்
இணைய க்ளிக் செய்க... https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)