பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

Jul 14, 2026 - 14:32
0
பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் பகுதிக்குள் நேற்று மாலை 4 குட்டிகள் உட்பட 10 காட்டுப்பன்றிகள் கொண்ட ஒரு கூட்டம் நுழைந்துள்ளது.

அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்தக் காட்டுப்பன்றி கூட்டம், அப்பகுதியில் உள்ள சிவராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

காட்டுப்பன்றிகள் மீட்பு
காட்டுப்பன்றிகள் மீட்பு

அப்போது எதிர்பாராதவிதமாக 10 காட்டுப்பன்றிகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளன. இதுகுறித்து தோட்டத்தில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் வலை வீசி காட்டுப்பன்றிகளை மீட்க முயன்றனர்.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு 4 குட்டிகள் உட்பட 10 காட்டுப்பன்றிகளையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்தக் காட்டுப்பன்றிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User