PBKS vs MI: "இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!" - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் வருத்தம்

May 15, 2026 - 13:01
0
PBKS vs MI: "இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!" - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் வருத்தம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-14) ஆட்டத்தில் பஞ்சாப் vs மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி வீழ்த்தியிருக்கிறது.

இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சவாலாகி இருக்கிறது

pbks vs mi
pbks vs mi

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், " இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது கடினமான ஒரு விஷயம் தான். ஆனால் எந்தவொரு குறிப்பிட்ட சூழலையும் நான் இங்கே குறை சொல்ல விரும்பவில்லை.

நேற்றைய போட்டியில் இரு அணிகளும் நன்றாகப் போராடினோம். திலக் வர்மா சிறப்பாக விளையாடினார். அவர் பந்துகளைத் தேர்ந்தெடுத்து அடித்த விதம் சிறப்பாக இருந்தது. ஃபீல்டிங்கிற்கு ஏற்றவாறு பந்துகளை அழகாக திசை திருப்பினார், எனவே அந்தப் பெருமை அவரையே சாரும்.

ஒரு கட்டத்தில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை தான் எடுப்போம் என்று தோன்றியது, ஆனால் அஸ்மத் ஆட்டத்தின் போக்கை அப்படியே எங்களுக்கு சாதகமாக மாற்றினார்.

திலக் வர்மா
திலக் வர்மா

200 ரன்களை எட்டியது அவரால் தான். அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் நாங்கள் கட்டாயம் வெல்ல வேண்டும். அந்த இரண்டு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். அவற்றில் விளையாட ஆவலாக உள்ளேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User