வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு – ஒரே ஆண்டில் 8 பேர் உயிரிழந்த சோகம்!

May 08, 2026 - 15:02
0
வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு – ஒரே ஆண்டில் 8 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். சமீப காலங்களாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் நேற்றிரவு வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். இதனிடையே இன்று காலை 5.30 மணியளவில் நான்காவது மலை செல்லும் வழியில் முழங்கால் திட்டு என்ற இடத்தில் மயில்சாமி சுயநினைவின்றி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனப்பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமை பணியாளர்கள் அவரை மீட்டு டோலி மூலம் அடிவாரம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

இதன் காரணமாக இந்தாண்டில் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளியங்கிரி மலை என்பது கடுமையான மலைப்பாதையாக இருப்பதால், மூச்சுத்திணறல், இருதய பாதிப்பு, உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, வலிப்பு உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகள் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User