O.M: "அவனுக்கு எவ்ளோ திமிர் பார் எனத் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு தனுஷ் விளக்கம்

Nov 17, 2026 - 13:30
0
O.M: "அவனுக்கு எவ்ளோ திமிர் பார் எனத் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு தனுஷ் விளக்கம்

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் காதலர்களாக நடித்த 'தேரே இஷ்க் மெய்ன்' பாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது.

அந்தப் பட விளம்பர நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்த தனுஷ் வெளியே சென்றபோது பொது இடத்தில் அவரின் பேன்ட்டை அட்ஜஸ்ட் செய்தார் ஸ்டைலிஸ்ட் காவ்யா ஸ்ரீராம்.

தனுஷ்
தனுஷ்

தனுஷின் பேன்ட் சுருங்கியிருந்ததை அவர் கவனிக்காத நிலையில் காவ்யா கவனித்து சரி செய்தார். ஆனால் காவ்யாவை தனுஷ் பார்க்கவில்லை. அந்த வீடியோ வைரலான நிலையில் தனுஷை நெட்சன்கள் சோசியல் மீடியாவில் திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் அந்தச் சம்பவம் குறித்து 'ஓம்' பட விழாவில் தனுஷ் பேசியிருக்கிறார்.

மேடையில் பேசிய அவர், "காவ்யா ஸ்ரீராம்தான் என் ஸ்டைலிஸ்ட். உங்களின் கடின உழைப்புக்கு நன்றி. தனி ஆளாக நிறைய வேலை செய்பவர். வேலை என்று வந்துவிட்டால் அப்படியொரு அர்ப்பணிப்பு அவருக்கு இருக்கும்.

தனுஷ்
தனுஷ்

நான் 'தேரே இஷ்க் மெய்ன்' புரொமோஷனுக்குச் சென்றபோது என் ஃபேன்ட் பின்னால் திரும்பி இருந்தது. பப்ளிக் என்று கூட பார்க்காமல் அவர் ஓடி வந்து சரி செய்தார். அவர் சரி செய்தது எனக்கு தெரியாது. நான் பாட்டுக்கு நடந்து சென்றுவிட்டேன். அவனுக்கு எவ்ளோ திமிர் பார் என நான்தான் திட்டு வாங்கினேன். நீங்கள் சில சமயம் கொஞ்சம் கம்மியாக வேலை செய்யலாம் என நினைக்கிறேன், நன்றி காவ்யா" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User