இனி உஜ்வாலா திட்டத்தில் 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் - மத்திய அரசு | Live Updates

Jun 09, 2026 - 10:01
0
இனி உஜ்வாலா திட்டத்தில் 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் - மத்திய அரசு | Live Updates

இனி 4 சிலிண்டர்கள் மட்டுமே!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில், இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிலிண்டர்
சிலிண்டர்

விஜய் - அன்புமணி சந்திப்பு

இன்று காலை பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்க இருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை தொடர்பாக பேசவிருக்கிறார் அன்புமணி.

விஜய் - அன்புமணி
விஜய் - அன்புமணி

இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று - சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.

இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் தொடங்கி வைக்கிறார் விஜய்.

சிங்கப் பெண் அதிரடிப் படை திட்டத்தின் நோக்கம் - தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது ஆகும்.

இந்தத் திட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் சம்பந்தமான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு பிரத்யேக காவல் படையை உருவாக்கப்பட உள்ளது.

இந்தப் படையில் ஐஜியாக பவானீஸ்வரி ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய்
விஜய்

இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ செய்யுங்க. மோ

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User