'நோபல் பரிசு கொடுக்கலாம்'- திமுகவுடன் நட்பு தொடரும் என்ற திருமாவின் கருத்துக்கு வைகோ பளிச் பதில்

Jul 08, 2026 - 16:32
0
'நோபல் பரிசு கொடுக்கலாம்'- திமுகவுடன் நட்பு தொடரும் என்ற திருமாவின் கருத்துக்கு வைகோ பளிச் பதில்

விசிக விருது வழங்கும் விழா சென்னையில் ஜூலை. 5 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலை​மையே அறி​வித்​து​விட்​டது.

இது​வரை நான் அறிவிக்​க​வில்​லை. தவெக கூட்​ட​ணி​யில் இருக்​கிறோமோ என்றும் அறிவிக்​க​வில்​லை. ஒரு​வேளை தவெக தலை​மை​யில் கூட்​டணி உருவா​னால், அதில் இடம்​பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்​லை.

திருமாவளவன்
திருமாவளவன்

திமுக தலை​வர்​கள் அனை​வரும் ஒன்​று சேர்ந்து விசிக​விலிருந்து ஒரு​வரை அழைத்து கட்​சி​யில் இணைத்​த​போது, திமுக தலை​மையே எங்​களு​டன் உறவு இல்லை எனச் சொல்​லி​விட்​டது. விசிக​வுடன் கூட்​டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டா​லின் தான்" என்று பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை. 7) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், "அமைச்சரவையில் சேர்ந்த உடனேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அந்த வகையில் திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது. விசிகவில் அதிருப்தி அடைந்து விலகிய முன்னணி பொறுப்பாளரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று பேசியிருந்தார்.

வைகோ
வைகோ

இந்நிலையில் இன்று (ஜூலை. 7) கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் திருமாவளவன் திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு, " எனக்கு அந்த சம்பவம் குறித்த முழுவிவரம் தெரியாது. எதை வேண்டுமானாலும் சொல்லி இந்த சர்க்கார் மீது பாயலாம் என்று நினைக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User