புதுச்சேரி சாலைகளில் இனி பசுமை ஆட்டோக்கள்! - சில நிமிடங்களில் பேட்டரியை மாற்றலாம்

Jul 16, 2026 - 16:31
0
புதுச்சேரி சாலைகளில் இனி பசுமை ஆட்டோக்கள்! - சில நிமிடங்களில் பேட்டரியை மாற்றலாம்

புதுச்சேரி  :  ஹோட்டல் அக்கார்டில் ( HOTEL ACCORD ) ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில்,  Piaggio Vehicles Private Limited நிறுவனம் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியது. நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கலந்து கொண்டு வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பியாஜியோ நிறுவனத்தின் துணைத் தலைவர் மட்டியோ கொலனின்னோ, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் பட்ஜாத்யா, புதுச்சேரியில் பியாஜியோ மின்சார வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகமான Future Automobiles நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜத் மல்ஹான் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது நிகாஸ் ஜக்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ரங்கசாமி

வழக்கமான மின்சார வாகனங்களைப் போல பல மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி, இந்த வாகனத்தின் காலியான பேட்டரியை சில நிமிடங்களிலேயே அகற்றி, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பொருத்தி மீண்டும் பயணத்தைத் தொடர முடியும் என்பதே இதன் முக்கிய சிறப்பம்சம்.

இதனால் வாகனங்களின் செயல்பாட்டு நேரம் அதிகரிப்பதுடன், வணிக ரீதியாகப் பயன்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்களின் தினசரி வருமானமும் உயரும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் பேசிய பியாஜியோ நிறுவனத்தின் பிரதிநிதிகள், இந்தியாவின் மின்சார வர்த்தக போக்குவரத்து துறையில் இந்த பேட்டரி ஸ்வாப் தொழில்நுட்பம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், சார்ஜ் ஆக காத்திருக்கும் நேரம் குறைவதால் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் ஓட்டுநர்களின் வருமானம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

புதுச்சேரி | ஆட்டோ

புதுச்சேரியில் இந்த சேவை அறிமுகமாகியிருப்பது, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதோடு, கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User