இந்தியாவின் சொந்த GPS-க்கு புதிய பலம்: NVS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய ISRO!

Oct 31, 2026 - 10:30
0
இந்தியாவின் சொந்த GPS-க்கு புதிய பலம்: NVS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய ISRO!

விண்ணில் பாய்ந்தது GSLV-F18; துல்லியமான வழிகாட்டி சேவைகளுக்கு புதிய முன்னேற்றம்!

இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC-ஐ வலுப்படுத்தும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) NVS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி இரவு 11.51 மணிக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, செயற்கைக்கோள் திட்டமிட்ட புவிமாற்றச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18
விண்ணில் பாய்ந்த GSLV-F18

என்ன ஸ்பெஷல்?

NVS-03 என்பது இரண்டாம் தலைமுறை NVS செயற்கைக்கோள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான NavIC-இன் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கும், அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இது உதவும்.

இந்தச் செயற்கைக்கோளின் முக்கிய சிறப்பம்சம், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அணு கடிகாரம் (Atomic Clock) ஆகும். செயற்கைக்கோளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கும், நேரத்தை மிகச் சரியாகக் கணிப்பதற்கும் அணு கடிகாரம் உதவுகிறது.

மேலும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் L5 மற்றும் S அலைவரிசைகளுடன், புதிதாக L1 அலைவரிசையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நவீன ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்களுடன் NavIC இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

NavIC அமைப்பு இந்தியாவின் நிலப்பரப்பு முழுவதும், நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவு வரையிலும் வழிகாட்டி சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, கடல் வழிச் சேவைகள், விமானப் போக்குவரத்து, அவசரகாலச் சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை போன்றவற்றுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

அமெரிக்காவின் GPS, ரஷ்யாவின் GLONASS போன்ற வெளிநாட்டு வழிகாட்டி அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவின் சொந்த வழிகாட்டி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் NVS-03 முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த ஏவுதல் அமைந்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி வாழ்த்து

NVS-03 செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற GSLV-F18 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்கு, ISRO விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC-ஐ வலுப்படுத்துவதில் இந்தப் பணி முக்கியமான முன்னேற்றம் என்றும், மேம்பட்ட திறன்களைக் கொண்ட NVS-03 செயற்கைக்கோள் முக்கியத் தொழில்நுட்பங்களில் தற்சார்பை மேம்படுத்துவதுடன், மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டி சேவைகளை ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் புதுமையான சிந்தனையும் தொடர்ந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User