"ஒருமுறை கூட இந்த T30-ல் பழுது ஏற்படவில்லை!" - ஆல் இந்தியா ரைட் அனுபவம் பகிரும் மணிகண்டன்

Mar 8, 2026 - 09:01
 0
"ஒருமுறை கூட இந்த T30-ல் பழுது ஏற்படவில்லை!" - ஆல் இந்தியா ரைட் அனுபவம் பகிரும் மணிகண்டன்

எலெக்ட்ரிக்கில் தினம் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு கொண்டு இருக்கிறது! அப்படி ஒரு சாதனை சமீபத்தில் நடந்திருக்கிறது. சாதனையை நிகழ்த்தியவர் சென்னை MCC கல்லூரி பேராசிரியர் பால மணிகண்டன்.

ஏற்கனவே Ultroviolette எலெக்ட்ரிக் பைக்கில் சவுத் இந்தியா ரைடு, லடாக் ரைடு என பல பயணங்களைப் பார்த்தவர் மணிகண்டன். அவர் இப்பொழுது ராப்டீ HV T30 எலெக்ட்ரிக் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். அவரிடம் இந்த இந்த ஆல் இந்தியா ரைடைப் பற்றி பேசினோம்.

மணிகண்டன் டீம்
மணிகண்டன் டீம்

7,530 கிமீ 'ஆல் இந்தியா ரைடை' இந்த ராப்டீ.HV T30 எலெக்ட்ரிக் பைக்கிலேயே முடித்துவிட்டீர்கள். Asia Book of Records & India Book of Records-ல் இருந்து அங்கீகாரமும் கூட கிடைத்திருக்கிறது. ஓரே சமயத்தில் இரண்டு பேரின்பத்தை சுமப்பது எப்படியுள்ளது?

இது சாதனைக்கான பயணம் மட்டுமல்ல; அது ஒரு அனுபவம், எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கான் விழிப்புணர்வைப் பற்றியது. இந்த ரைடை முடிக்க 19 நாட்களானது. விதவிதமான நிலபரப்புகள், காலநிலைகளில் பயணித்தபோதும் இந்த பைக்கின் ஸ்டெபிளிட்டியும், பெர்ஃபாமன்ஸும் நன்றாகவே இருந்தது. இந்தப் பயணத்தில் Asia Book of Records & India Book of Records-ன் அங்கீகாரம் மிகவும் ஸ்பெஷல். இந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவடைந்ததில்தான் எனக்கு திருப்தி. முறையான சார்ஜிங் வசதிகளும் சரியான தொழில்நுட்பமும் இருந்தால், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தால் எந்த ICE வாகனத்திற்கும் சமமாக செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் பயணம் ஒரு சான்று.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்துறையில் இந்தப் பயணம் ஒரு முக்கியமான மைல்கல்.உங்கள் வாழ்க்கை பயணத்தில் எப்படி?

இந்தியாவில் எவ்வளவு சார்ஜிங் நிலையங்கள் உள்ளன என்பதை பலர் பார்ப்பதில்லை. இந்தியா முழுவதும் 40,000-க்கும் அதிகமான சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனத்தில் பயணத்தின் நடுவிலேயே சார்ஜ் முடிந்துவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தப் பயணம். T30 சிட்டி பயணத்திற்கு வடிவமைக்கப்பட்ட வாகனம்தான். ஆனால், இந்தப் பயணம் அதைவிட T30-யால் அதிகம் செய்ய முடியும் என்பதை நிரூபித்ததுள்ளது. இதில் நானும் ஒரு அங்கமாய் இருப்பதில் மகிழ்ச்சி.

19 நாட்களில் ரைடை முடித்துவிட்டீர்கள், அதுவும் பெட்ரோல் பைக் எடுத்துக் கொள்ளும் அதே நேரத்திற்குள். இது எப்படி சாத்தியம்?

ஆரம்பத்தில் இந்த ரைடை சாதாரணமாகத்தான் தொடங்கினோம். CCS2 ஃபாஸ்ட் சார்ஜிங்கும், பைக்கின் பெர்ஃபாமன்ஸும்தான் இதை சாத்தியமாக்கியது. அதன் மூலம் 19 நாட்களில் 7,500 கிமீ பயணம் முடிந்தது. பெட்ரோல் வாகனங்களின் நேரத்தைப் பொருந்தச் செய்வது எங்கள் நோக்கமே இல்லை. ஆனால், என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது பேட்டரியின் நிலைத்தன்மைதான்.

ராப்டீ.HV T30-ஐ ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

ராப்டீ முதலில் எனக்கு அறிமுகமானது அங்கு வேலை செய்யும் ஒரு நண்பர் மூலமாகதான். ஒரு டெஸ்ட் ரைடு செய்யதான் நான் சென்றேன். T30-யை ரொம்ப காலமாக கவனித்து வருகிறேன். ஆனால் R&D-ல் இருந்ததால் அதை முயற்சிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு அதை நேரில் ஓட்டி பார்த்தபோது, குறிப்பாக CCS2 சார்ஜிங்கை அனுபவித்தபோது, அதுவே ஒரு காரணமானது. எவ்வளவு எளிதாகவும், வேகமாகவும் சார்ஜ் ஆகிறது என்பதைப் பார்த்தபோது, இந்தியா முழுவதும் ஒரு ரைடு போகலாம் எனும் நம்பிக்கை வந்தது. அந்த யோசனையை நான் தினேஷிடம் சொன்னேன். அடுத்த இரண்டு நாட்களில் அந்த சாதாரண உரையாடல் ஒரு உண்மையான பயணமாக மாறியது.

Raptee HV T30
Raptee HV T30

இந்தப் பயணத்தில் உங்களுக்கே ஆச்சரியம் தந்தது எது?

இந்தப் பயணத்தின் போது ஒருமுறை கூட இந்த T30-ல் பழுது ஏற்படவில்லை. அதுதான் எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. இப்படியொரு வாகனத்தை உருவாக்கிய அணியை பாராட்டியே ஆகவேண்டும். இந்த நம்பகத்தன்மையால் நான் தினமும் சராசரியாக 407கிமீ வரை பயணம் செய்ய முடிந்தது. முன்பு நான் எலெக்ட்ரிக் வாகனங்களில் செய்த பயணங்களை விட இது கிட்டத்தட்ட 100 கிமீ அதிகம்.

Electric Car
Electric Car

ஒரு எலெக்ட்ரிக் பைக்கை கார் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்யும்போது மக்கள் எப்படி பார்த்தார்கள்?

அவர்கள் குழம்பமாகத்தான் பார்த்தார்கள். சார்ஜிங் நிலையத்தில் பைக்கை நிறுத்தும் போதெல்லாம், காவலர்கள் “சார், இது கார் சார்ஜ் செய்யும் இடம்” என்பார்கள். அப்போது நான் இந்த பைக்கும் CCS2 சார்ஜிங்தான் என்பேன். சில சமயங்களில், அவர்களுக்கு முன்னால் பைக்கை சார்ஜரில் இணைத்து அது வேலை செய்கிறது என்பதை காட்டுவேன். இந்த ஆச்சரியமும் ஆர்வமும் முழு பயணத்திலும் தொடர்ந்து இருந்தது. மக்கள் சுற்றி வந்து கேள்விகள் கேட்டு, பைக்கை நெருக்கமாக பார்த்து ஃபோட்டோக்களும் எடுத்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0