கிருஷ்ணகிரி: ஸ்கூட்டியில் சென்ற ஆசிரியர்கள் மீது மோதிய லாரி; உடன் சென்ற மாணவனுக்கும் நேர்ந்த சோகம்

Sep 24, 2026 - 09:01
0
கிருஷ்ணகிரி: ஸ்கூட்டியில் சென்ற ஆசிரியர்கள் மீது மோதிய லாரி; உடன் சென்ற மாணவனுக்கும் நேர்ந்த சோகம்

மாலை பள்ளி முடிந்தது. உற்சாகமாகப் பேசிக்கொண்டு கிளம்பிய மூன்று பேர் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தால் உயிரற்ற உடல்களாக மருத்துவமனை பிணக்கூராய்வுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கி இதயத்தை உடைய வைத்துள்ளது.

அவர்கள் வந்த ஸ்கூட்டி
அவர்கள் வந்த ஸ்கூட்டி

சாலை விபத்தில் இரு ஆசிரியைகளும் ஒரு மாணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வி.மாதேப்பள்ளியில் இயங்கி வரும் ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சுதா ராணி, பள்ளி முடிந்ததும் தன்னுடைய ஸ்கூட்டியில் சக ஆசிரியை முஸ்கான்கவுஸ் ஷேக், அவருடைய 7 வயது மகன் ஆகியோரை ஏற்றிக்கொண்டு மாலை 4.20 மணிக்கு கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்த தகவல் தெரிந்து அங்கு வந்த வேப்பனப்பள்ளி போலீசார் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி
விபத்தை ஏற்படுத்திய லாரி

உயிரிழந்த சுதாராணி (35) கிருஷ்ணகிரி பழைய பேட்டையைச் சேர்ந்தவர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்கான் கவுஸ்ஷேக்(27) தற்பொழுது கிருஷ்ணகிரி மேல்சோமாபேட்டையில் வசித்து வந்தார், இவர் மகன் ரிகான்கவுஸ் ஷேக்(7) இப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

காலையில் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்றவர்கள் மாலையில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கும், உறவினர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User