Karuppu Release: "இது நடந்திருக்கக்கூடாது; நானும் இதை எதிர்பார்க்கல!" - கண்கலங்கிய ஆர்.ஜே.பாலாஜி

May 14, 2026 - 14:31
0
Karuppu Release: "இது நடந்திருக்கக்கூடாது; நானும் இதை எதிர்பார்க்கல!" - கண்கலங்கிய ஆர்.ஜே.பாலாஜி

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களால் திரைப்படத்தின் முதல் காட்சியான, 9 மணி ஷோ ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

நேற்றிரவே திரைப்படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படும் என இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, "எனது அன்பிற்குரிய ரசிகர்களே, தற்போதைய சூழல் குறித்து என்னிடம் உறுதியான பதில் ஏதுமில்லை. பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பல தடைகள் வந்திருக்கின்றன.

`கருப்பு’ டீம்!
`கருப்பு’ டீம்!

ஆனால் ஏதோ ஒரு வகையில் கடவுள் அந்தத் தடைகளையெல்லாம் கடக்க வைத்து, 32 மாதங்களுக்குப் பிறகு இன்று நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். 'கருப்பு' நாளைக்குக் காலைல செமையா ரிலீஸ் ஆகும்..!நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!" எனப் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இயக்குநர் போட்ட பதிவைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்படுவதாக அவருடைய எக்ஸ் பக்கத்தின் மூலம் அறிவித்தார்.

இந்நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்கலங்கியவாறு பேசி, படத்தின் ரிலீஸ் பற்றி ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில், "காரில் இருந்து நான் கொடுக்கக்கூடிய கடைசி அப்டேட் இதுதான்னு நம்புறேன். என்னை மன்னிச்சிடுங்க. இது நடந்திருக்கக்கூடாது. படத்தை பார்ப்பதற்காகப் பல தூரம் பயணித்து வந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

படம் பார்க்குறதே நம்ம மனசுல, வீட்டுல இருக்குற, வாழ்க்கையில இருக்குற பிரச்சினையில இருந்து வெளிய வர்றதுக்குத்தான். ஆனா அந்தப் படம் பார்க்குறதே அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா, அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி, அதுவும் பார்க்க முடியாம போனதுக்கு ஐயாம் ரியலி சாரி.

நானும் இதை எதிர்பார்க்கல. நான் நம்பிக்கையோட இருக்கேன். இன்னைக்கு மாலை 6 மணியில இருந்து இந்தப் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு, படம் ரிலீஸ் ஆகும்னு நம்புறேன்.

கருப்பு - சூர்யா
கருப்பு - சூர்யா

மே 14-ஆம் தேதி 'கருப்பு'. ரிலீஸ் ஆகிப் பெரிய பிளாக்பஸ்டர் ஆகும்னு மேனிஃபெஸ்ட் பண்ணிருக்கேன்." எனக் கண்கலங்கியவர், "அழுகை வருது. அது வலி. அது வேற டிபார்ட்மென்ட். கடவுள் இதைக் கடத்தி இந்தப் படத்தை இன்னைக்குச் சாயங்காலம் ரிலீஸ் பண்ணிக் கொடுப்பாரு.

தாமதத்திற்கு மன்னிக்கவும், காத்திருப்புக்கு வொர்த்தானதாக இந்தப் படம் இருக்கும். தாமதத்திற்கு, இத்தனை விஷயங்களை நீங்கள் கடக்க வைத்ததற்கும் மன்னித்துவிடுங்கள். படம் நல்லா இருக்கும் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்பிக்கை இருக்கு." எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User