Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" - பரத் வருத்தம்

Mar 21, 2026 - 13:01
 0
Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" - பரத் வருத்தம்

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள்.

Kalidas 2
Kalidas 2

இயக்குநர் ஶ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் பவானி ஶ்ரீ, 'பூவே உனக்காக' சங்கீதா, அபர்ணதி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

அப்போது நடிகர் பரத் பேசுகையில், "என்னுடைய கரியர்ல நிறைய புதுமுக இயக்குநர்களோடு நான் வேலை பார்த்திருக்கேன். என்னுடைய சினிமா பயணத்துல இருந்து நான் எடுத்துக்கிட்ட டேக் அவே என்னனா, ஒரு நல்ல இயக்குநர் கிடைச்சா உங்க ஜர்னி திறந்திடும். நல்ல டைரக்டர் கிடைக்கலைனாதான் பஞ்சாயத்து.

சினிமாவுல எல்லா ஹீரோஸுக்கு வெற்றி, தோல்வி இருக்கும். மூணு வெற்றி படம் கொடுத்ததுக்குப் பிறகு தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்க.

திடீர்னு தோல்வி படம் கொடுத்திட்டால், அதைச் சார்ந்துதான் மார்க்கெட் இருக்கும். அப்போ அவருக்கு மார்க்கெட் இல்லைனு சொல்வாங்க.

Bharath Speech
Bharath Speech

அப்படியான சூழல்ல இருந்தபோது எனக்கு கிடைச்ச படம்தான் 'காளிதாஸ்'. அது எனக்கு கம்பேக் படமாக இருந்துச்சு. நான் சினிமாவை விட்டு எங்கேயும் போகல. இதே சினிமாவுல இருக்கணும்னுதான் அடிச்சு, புடிச்சு வந்துட்டு இருக்கேன்.

உங்களுடைய கடைசிப் படத்தை வச்சுதான் இங்க பிசினஸ் இருக்கும். இந்தப் படத்தைச் சின்னதாகத் தொடங்கினோம். ஆனா, இன்னைக்கு இது பெரிய படமாக வந்திருக்கு. நான் ரீல்ஸ்லதான் நிறைய ஆடியோ லாஞ்ச் பாக்குறேன்.

நானும் படங்கள் பண்றேன். ஆனா, என்னுடைய படங்களுக்குப் பெரியளவுக்கு ஆடியோ லாஞ்ச் நடந்தது இல்ல. இதை நான் சிம்பதிக்குச் சொல்லல. இதுதான் ரியாலிட்டி." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0