``ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவர்தான்; ஆனால்..." - ல.ஜ.க-விலிருந்து விலகியது குறித்து தாடி பாலாஜி

Jun 15, 2026 - 18:01
0
``ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவர்தான்; ஆனால்..." - ல.ஜ.க-விலிருந்து விலகியது குறித்து தாடி பாலாஜி

தேர்தலுக்கு முன் லட்சிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி, தற்போது அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் திமுக அனுதாபி எனச் சொன்னார்கள். விஜய் கட்சி தொடங்கிய போது அவரது பெயரையெல்லாம் பச்சை குத்தினார். ஆனாலும் அங்கு என்ன சிக்கல்களை எதிர்கொண்டாரோ தெரியவில்லை, திடீரென சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய 'லட்சிய ஜனநாயகக் கட்சி'யில் போய் சேர்ந்தார்.

கட்சியில் அவருக்கு மாநில அளவிலான பொறுப்பையும் வழங்கினார் சார்லஸ்.

இந்தச் சூழலில் அங்கிருந்தும் வெளியேறி இருக்கிற நிலையில், 'என்ன நடந்தது' என பாலாஜியையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

தாடி பாலாஜி

''தமிழருவி மணியன் சார் கொஞ்ச நாள் முன்னாடி அவரு கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைச்சப்ப 'பிரமாண்ட இணைப்பு'னு அதைக் கலாய்ச்சு சோஷியல் மீடியாவுல கமென்ட்டுகள் பறந்தன.. அந்த ரேஞ்சுக்கு என்னையும் கலாய்ச்சிருக்கிறதா நண்பர்கள் சிலர் சொன்னாங்க. நானே ஒரு காமெடி நடிகன். என்னை வச்சு காமெடியா? அப்படியே ஃபீல் ஆகி உட்கார்ந்துடுவேன் பாருங்க‌" என்றவரிடம், 'சரி விஷயத்துக்கு வாங்க' என்றோம்.

``புதுச்சேரியை மையமாக் கொண்டு அவர் தொடங்கின கட்சிக்கு விருப்பப் பட்டுதான் போனேன். போனதும் எனக்கு பொறுப்பும் அறிவிச்சார். அவர் நல்ல மனுஷந்தான். ஆனா என்னனு தெரியல, புதுசா ஒருத்தர் கட்சிக்கு வந்துட்டா பழைய ஆளுக்கு மரியாதை குறைஞ்சிடுது. அவரா அப்படி நடந்துக்கிடுறாரா அல்லது சுத்தி இருக்கிறவங்க அவரை அப்படி வழி நடத்துறாங்களா தெரியல. லட்சிய ஜனநாயகக் கட்சினு பேர் வச்சிருக்கார். என்ன லட்சியம்னும் தெரியல. ஜனநாயகமும் இல்லைனு தெரிஞ்ச பிறகு அங்க இருக்கிறதுல என்ன பிரயோஜனம்?

பல பேரை கட்சியில் சேர்த்தார். திடீர்னு சேர்த்தவங்களை அவராகவே கட்சியை விட்டு நீக்கினார். காரணம் அவருக்கே வெளிச்சம். எதுக்கு வம்புன்னு நானே வெளியில போயிடுறேன்னு முறைப்படி ராஜினாமா கடிதம் அனுப்பிட்டு வெளியில வந்துட்டேன்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User