Sivakarthikeyan: "அவர் 'உங்களுக்கு Fans எல்லாம் இருக்காங்களா?'னு கேட்டார்" - சிவகார்த்திகேயன்

Oct 07, 2026 - 13:00
0
Sivakarthikeyan: "அவர் 'உங்களுக்கு Fans எல்லாம் இருக்காங்களா?'னு கேட்டார்" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' படத்திலும், 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தொடர்பாக இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்களிடம் பேசிய முழு காணொளி தற்போது வெளியாகியிருக்கிறது.

SK 26 - Seyon
SK 26 - Seyon

அவர், "நான் சினிமாவுக்கு வந்த புதுசுல ஒரு சில படங்கள் பண்ணியிருந்த சமயத்துல, ஷூட்டிங் பார்க்கிறதுக்காக என்னோட ரசிகர்கள் ஒரு சிலர் வந்திருந்தாங்க. அவங்களையெல்லாம் பார்த்திட்டு நான் திரும்பி வரும்போது, அங்க இருந்த ஒரு தயாரிப்பாளர் என்கிட்ட வந்து, 'என்ன சிவா, யாரு இதெல்லாம்?'னு கேட்டாரு.

நான் ரொம்ப பெருமையா, 'என்னோட ஃபேன்ஸ் சார்'னு சொன்னேன். உடனே அவர் ஆச்சரியமா, 'ஓ... உங்களுக்கு ஃபேன்ஸ் எல்லாம் இருக்காங்களா?'னு கேட்டாரு.

'ஆமா சார், இப்போ நிறைய பேர் ஃபேன்ஸ்னு சொல்லி ரொம்ப ஆசையா வந்து பார்க்குறாங்க சார்'னு சொன்னேன். அப்போ அவர் சிரிச்சுக்கிட்டே, 'சிவா, இதெல்லாம் ஆரம்பத்துல இருக்குற அந்த கிரேஸ்ல வர்றது'னு சொன்னாரு.

நான் உடனே, 'இல்ல சார், அவங்க தொடர்ந்து வருவாங்க'னு உறுதியா சொன்னேன். ஆனா அவர் விடாம, 'சிவா, உங்களுக்கு இன்னும் அனுபவம் இல்ல, புரியல. இதெல்லாம் கொஞ்ச காலம்தான் வருவாங்க. நீங்க இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காம உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க'னு சொன்னாரு.

நான் மீண்டும் அதை மறுத்து, 'இல்ல சார், அவங்களைப் பார்த்தா அப்படித் தெரியல. நிச்சயமா கடைசி வரைக்கும் என் கூடவே வருவாங்க சார்'னு சொன்னேன்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

நான் ரெண்டு முறை அவரை எதிர்த்துப் பேசினதும் என்னைப் பார்த்து, 'சரி... அவங்க வருவாங்க, இருப்பாங்க. ஆனா நீங்க இந்த இண்டஸ்ட்ரியில இருப்பீங்களா?'னு கேட்டாரு.

இன்னைக்கு 2026, சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தோட நிர்வாகிகள் சந்திப்பு நடக்குது. 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இங்க வந்திருக்கீங்க.

இன்னைக்கு இந்த நிகழ்வைப் பார்க்குற சிலருக்குத் தோணலாம், 'ஏதோ இப்பதான் திடீர்னு பண்றாங்க'னு. ஆனா நாம இதை ஏதோ இன்னைக்கு நேத்து பண்ணல, ரொம்ப வருஷமா பண்ணிட்டு இருக்கோம். இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை தவறாம இந்த நிர்வாகிகள் சந்திப்பை நடத்திட்டு வர்றோம்" எனப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User