Jailer-2: "என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார்"- சௌந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி

Oct 15, 2026 - 18:30
0
Jailer-2: "என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார்"- சௌந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

 ஜெயிலர் 2
ஜெயிலர் 2

முதல் பாகத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகிடையே படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் படம் பார்த்தப் பிறகு சௌந்தர்யா, ரஜினிகாந்தை வாழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், " 'தலைவர்' என்பது ஒரு உணர்வு. அது எனக்கு மட்டுமல்ல. அவரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தான்.

அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணர மட்டுமே முடியும். 'ஜெயிலர்-2' ஒரு பிரமாண்டமான பிளாக்பஸ்டர் திரைப்படம்.

என் 'டைகர்' முத்துவேல் பாண்டியன், என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார்.

 ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த்

51 வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார். '51 வருட ரஜினிசம்' இந்தத் திரைப்படத்தை இயக்கிய நெல்சன், இசையமைத்திருந்த அனிருத் என ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள்.

இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User