Iran: "மகளே, வீட்டிற்குள்ளேயே இரு" - நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஈரானில் சிக்கித் தவிப்பு

Mar 2, 2026 - 13:02
 0
Iran: "மகளே, வீட்டிற்குள்ளேயே இரு" - நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஈரானில் சிக்கித் தவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், அபுதாபி, துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நடந்து வரும் ஈரானில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடங்கும்.

அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் போர் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். படிப்பு முடிய இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், அபுதாபி, துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நடந்து வரும் ஈரானில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடங்கும்.

அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் போர் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். படிப்பு முடிய இன்னும் 6 மாதம் மட்டுமே இருக்கின்றன.

அபிஜீத் குடும்பம்
அபிஜீத் குடும்பம்

அப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் தொடங்கி இருக்கிறது. இந்தப் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இண்டர்நெட், மார்க்கெட், விமான போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் மாணவர்களின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். மாணவர்கள் தங்களைப் பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்குள் இருக்கும்படியும், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவியின் தாயார் சப்னம் இது குறித்து கூறுகையில், ''நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாக எனது மகள் தெரிவித்துள்ளார். நான் வீட்டிற்குள் இருக்கச் சொல்லியிருக்கிறேன். தூதரகம் சொல்கின்றபடி நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.

எங்கள் மகளை மத்திய அரசு பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. படிப்பு முடிய இன்னும் 6 மாதங்கள்தாம் இருக்கின்றன'' என்றார்.

ஈரானில் இருக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு நெருங்குவதால் இந்தியா திரும்பத் தயங்குகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் மார்க்கெட் அடைக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் தவிப்பதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கமேனி
கமேனி

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல இருந்த பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு விமான டிக்கெட் முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று அபுதாபி, பஹ்ரைன், தோஹா போன்ற நாடுகளின் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

மும்பயைச் சேர்ந்த அபிஜீத் என்பவர் தனது குடும்பத்தோடு பஹ்ரைனில் வசித்து வருகிறார். அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் ஈரான் போட்ட குண்டு வெடித்ததாக அபிஜீத் தெரிவித்துள்ளார். அவர்கள் இப்போது பாதுகாப்பான இடத்திற்கு மாறி இருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0