'கத்தாரில் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை?' - ட்ரம்பின் ட்வீட்டும், ஈரானின் மறுப்பும்

Jun 30, 2026 - 13:02
0
'கத்தாரில் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை?' - ட்ரம்பின் ட்வீட்டும், ஈரானின் மறுப்பும்

ஈரான், அமெரிக்கா - இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருக்கிறது. ஆனால், அதிலும் குழப்பம் நிலவுகிறது.

நேற்று (ஜூன் 29, 2026) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சந்திப்பு நாளை தோஹாவில் நடைபெறும்" என்று பதிவிட்டிருக்கிறார். தோஹா, கத்தார் நாட்டின் தலைநகரம் ஆகும்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான காசெம் கரிபாபாதி.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

மேலும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி, "அமெரிக்கப் பிரதிநிதிகள் கத்தாருக்குச் செல்வதற்கும், ஈரானிய தூதுக்குழு கத்தாருக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதே ஈரானின் இப்போதைய முக்கிய முன்னுரிமை.

அது தொடர்பான கோரிக்கைகளை டெஹ்ரான் தீவிரமாகப் பின்தொடர்ந்து வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User