IPL: "இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் என்னை ஏலம் கேட்கவில்லை, ஏன் என.!"- வைபவ் சூர்யவன்ஷி

Jun 08, 2026 - 12:32
0
IPL: "இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் என்னை ஏலம் கேட்கவில்லை, ஏன் என.!"- வைபவ் சூர்யவன்ஷி

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யவன்ஷி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இரண்டே அணிகள் தான் தன்னை ஏலத்தில் எடுக்க முன்வந்தன என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஏலத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எனக்காக இரண்டு அணிகள் மட்டுமே ஏலம் கேட்டன, நான் நன்றாகத்தான் விளையாடுகிறேன், என்னுடைய ட்ரையல்ஸ்களிலும் நான் சிறப்பான பங்களிப்பைத்தான் கொடுத்திருந்தேன்.

இருப்பினும் மற்ற அணிகள் ஏன் என்னை ஏலம் கேட்கவில்லை என்று எனக்கு தோன்றி இருக்கிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இருக்கிறேன். என்னை ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற ஒரு சிறந்த அணிக்குள் கொண்டு வந்ததற்காக கடவுளுக்கு நான் இதுவரை குறைந்தது ஆயிரம் முறையாவது நன்றி சொல்லியிருப்பேன்.

இங்குள்ள பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், சக வீரர்கள், மேனேஜ்மென்ட், மீடியா குழு மற்றும் ட்ரெயினர்கள் என அனைவரும் ஒரு குடும்பத்தைப் போலத்தான் பழகுகிறார்கள்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

நாம் நம்முடைய சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகிறார்கள். எந்த அளவுக்கு சௌகரியமாக உணர்கிறோம் என்றால், நமக்கு ஏதேனும் கவலை அல்லது மன உளைச்சல் இருந்தால் கூட அதை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

அணியில் உள்ள அனைத்து சீனியர் வீரர்களும் எனக்கு வழிகாட்டுகிறார்கள். எது நல்லது, நான் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று எனக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User