IND vs NZ: "டி20-யில் என்னை எப்படி மதிப்பிட்டுக் கொள்ள வேண்டுமென எனக்கு தெரியும்"-ஆட்டநாயகன் பும்ரா

Mar 9, 2026 - 00:32
 0
IND vs NZ: "டி20-யில்  என்னை எப்படி மதிப்பிட்டுக் கொள்ள வேண்டுமென எனக்கு தெரியும்"-ஆட்டநாயகன் பும்ரா

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றிருக்கிறார் .

இந்திய அணி
இந்திய அணி

விருதை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, "இந்தியாவில் இதற்கு முன் ஒரு இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறேன். அதில் தோற்றிருக்கிறோம். இந்த முறை மீண்டும் ஒரு வாய்ப்பில் வென்றிருக்கிறோம்.

கடவுளின் அருளால் நாங்கள் சாதித்திருக்கிறோம். டி20 க்களில் என்னை எப்படி மதிப்பிட்டுக் கொள்ள வேண்டுமென எனக்கு தெரியும். என்னுடைய ஆட்டத்துக்காகவும் தருணத்துக்காகவும் காத்திருப்பேன்.

இந்த மைதானம் ப்ளாட்டான பிட்ச்சை கொண்டது. இங்கே நான் நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். அதனால் என்ன செய்ய வேண்டுமென எனக்கு தெரிந்திருந்தது. இங்கே வேகமாக பந்துவீசினால் ஷாட் ஆட சுலபமாக இருக்கும்.

பும்ரா
பும்ரா

அதனால்தான் மெதுவாக வீசினேன். எங்களின் பௌலிங் யூனிட் மிகத்தெளிவாக இருந்தது. எல்லாருக்கும் ஒரு ஐடியா இருக்கும். நாங்கள் கூடிப் பேசி முடிவெடுப்போம். ரசிகர்கள் எங்களுக்கு பேராதரவை கொடுத்தார்கள். அதற்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0