முதலில் தோல்வி; பின்னர், 'பேருந்தில் மின்கசிவு' - குஜராத் டைடன்ஸ் அணிக்கு அடுத்தடுத்த பிரச்னைகள்

Jun 01, 2026 - 10:31
0
முதலில் தோல்வி; பின்னர், 'பேருந்தில் மின்கசிவு' - குஜராத் டைடன்ஸ் அணிக்கு அடுத்தடுத்த பிரச்னைகள்

நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், ஆர்.சி.பி கோப்பையைக் கையிலேந்த, குஜராத் டைடன்ஸ் தோல்வியைத் தழுவினர்.

இந்தப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முடித்துவிட்டு, தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளனர் குஜராத் டைடன்ஸ் வீரர்கள்.

ஹோட்டலுக்கு செல்லும் வழியில், திடீரென அந்தப் பேருந்திற்குள் புகை சூழ்ந்துள்ளது. உடனே வீரர்கள் பேருந்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி
குஜராத் டைட்டன்ஸ் அணி

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், வீரர்கள் சாலையிலேயே இருந்துள்ளனர்.

பின்னர், பேருந்திற்குள் சூழ்ந்த புகைக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் 'மின் கசிவு' என்று தெரிய வந்துள்ளது.

புகை சூழ்ந்த உடனேயே, வீரர்கள் வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் ஆபத்து இல்லை. அனைவரும் நலமாக உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User