"இறந்தாலும் எங்களுடன்தான் இருக்கவேண்டும்" - புதைத்த நாயை நள்ளிரவில் தோண்டி எடுத்து வந்த ஷாருக்கான்

May 19, 2026 - 08:00
0
"இறந்தாலும் எங்களுடன்தான் இருக்கவேண்டும்" - புதைத்த நாயை நள்ளிரவில் தோண்டி எடுத்து வந்த ஷாருக்கான்

பாலிவுட் நடிகர்கள் அனைவருமே நாய்கள் மீது அதிக பாசம் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு நடிகரும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருக்கின்றனர். நடிகர் ஷாருக்கானிடம் முதலில் 4 நாய்கள் இருந்தன. அவற்றின் மீது ஷாருக்கான் உணர்வுபூர்மாக அதிக பாசம் வைத்திருந்தார்.

இது குறித்த ஒரு சம்பவத்தை ஷாருக்கானின் மனைவி கெளரியின் மாமா வெளியிட்டுள்ளார். கெளரியின் தாய்மாமன் இந்தப் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், நான் கெளரிக்கு ஒரு சீன நாய் ஒன்றைக் கொடுத்து இருந்தேன். அந்த நாய் மீது ஷாருக்கானும் அதிக அன்பு வைத்திருந்தார். ஒரு முறை ஷாருக்கான் படப்பிடிப்புக்குச் சென்று இருந்தார்.

அந்நேரம் அந்த நாய் ஏதோ பிரச்னையில் இறந்துவிட்டது. வீட்டில் இருந்த ஊழியர்கள் நாயை நன்றாக ஒரு துணியில் சுற்றி அருகில் இருந்த கடற்கரையில் மணல் தோண்டி புதைத்துவிட்டு வந்துவிட்டனர்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

ஷாருக்கான் நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார். வந்தவுடன் நாயை எங்கே என்று கேட்டார். உடனே ஊழியர்கள், அது நம்மை விட்டுபோய்விட்டது என்று தெரிவித்தனர். இப்போது எங்கே என்று ஷாருக்கான் கேட்டதற்கு கடற்கரையில் மணல் தோண்டி புதைத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதிகாலை 2.30 மணிக்கு உறங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி எங்கே புதைத்தீர்கள் என்று காட்டுங்கள் என்று கூறி அவர்களை கடற்கரைக்கு அழைத்துச்சென்றார். ஊழியர்கள் நாய் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டியதும் ஷாருக்கானே அந்த இடத்தைத் தோண்டி நாயை வெளியில் எடுத்தார்.

நாயை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டிற்குப் பின்புறம் அதனைப் புதைத்தார். அதோடு அந்த இடத்தில் ஒரு அடையாளத்தையும் வைத்தார். இறந்த நாயைப் பார்த்து ஷாருக்கான் அழுதார். எனது நாயை எப்படி தூக்கி எறிய உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? அவன் இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் எங்களுடன் தான் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

கெளரி கானும் அந்த நாயுடன் ஷாருக்கான் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாய் இறந்தபோது ஷாருக்கான் தனது துயரத்தை வெளிப்படுத்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஷாருக்கான் இப்போது கிங் படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அதன் படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்று இருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User