ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி!

Jun 08, 2026 - 10:01
0
ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி!

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகில் உள்ள மணக்காட்டுப்புதூரைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இவரின் தந்தை தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். மாணவி அளவுக்கு அதிகமாக செல்போனில் நேரம் செலவிடுவதைப் பார்த்து கவலையடைந்த பெற்றோர், படிப்பு மீது கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

Suicide

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நீண்ட நேரமாக செல்போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். செல்போன் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோரின் கண்டிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத மாணவி, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார். அவரின் இந்த தவறான முடிவால் பெற்றோர் வேதனையில் தவிக்கின்றனர். மாணவியின் உடலை மீட்ட காவல்துறையினர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவி தற்கொலை குறித்து மலையம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை தீர்வல்ல. இதுபோன்ற தவறான முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User