Drishyam 3: 'த்ரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு; காரணம் என்ன?

Mar 24, 2026 - 16:01
 0
Drishyam 3: 'த்ரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு; காரணம் என்ன?

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது மோகன்லாலின் 'த்ரிஷ்யம் 3'.

ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் முன்பு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறார்கள்.

Drishyam 2
Drishyam 2

மோகன்லாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மே 21-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

'த்ரிஷ்யம்' ப்ரான்சைஸின் மூன்றாவது பாகமான இப்படத்திலும் மீனா, எஸ்தர் அனில், முரளி கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான போர் சூழல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய சினிமாவுக்கென முக்கிய மார்க்கெட் இருப்பதால் ரிலீஸ் தேதி மாற்றும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இந்தப் போர் சூழல் காரணமாகதான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யஷ்ஷின் 'டாக்சிக்' படத்தின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டது.

Mohanlal
Mohanlal

அஜய் தேவ்கன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இதன் இந்தி வெர்ஷன் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.

'த்ரிஷ்யம்' ப்ரான்சைஸ் கடந்த 2013-ல் தொடங்கியது. முதல் பாகம் வெற்றி பெற்றதுடன், பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

2021-ல் வெளியான 'த்ரிஷ்யம் 2' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது மூன்றாவது பாகம் வரவிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0