`இந்த டாஸ்மாக் கடையை மூடாதீங்க' - மதுபான குடோனுக்கே சென்ற வண்டிசோலை ஆண்கள்! | வைரலான வீடியோ

Jun 22, 2026 - 11:31
0
`இந்த டாஸ்மாக் கடையை மூடாதீங்க' - மதுபான குடோனுக்கே சென்ற வண்டிசோலை ஆண்கள்! | வைரலான வீடியோ

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் 717 கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்டதோடு, மூடப்பட்ட கடைகளின் பட்டியலையும் வெளியிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளையும் மூடப்பட்டன. இந்த நிலையில் குன்னூர் அருகில் உள்ள வண்டிசோலை பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என வலியுறுத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் சிலர் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கே சென்று முறையிட்டு மனு கொடுத்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் டாஸ்மாக் குடோனுக்கு சென்றும் முறையிட்டிருக்கிறார்கள்.ன்

வண்டிசோலை பகுதி ஆண்கள்

இது குறித்து பேசும் அவர்கள், " மது குடித்தால் தான் எங்களால் வேலைக்கு போக முடியும். தினமும் 300 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம்.‌ மது குடிக்க ரூ.150, பீடி செலவு 50 போக மீதமுள்ள 100 ரூபாயை வீட்டுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.

இந்த கடையை மூடிவிட்டால் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று மது வாங்க வேண்டும். எங்களால் வேலைக்கு செல்ல முடியாது. குடும்பத்தையும் பார்க்க முடியாது" என கூறியுள்ளனர். இவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User