Doctor Vikatan: பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடித்தால் உடல் வலிமை பெறுமா?

Oct 09, 2026 - 08:30
0
Doctor Vikatan: பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடித்தால் உடல் வலிமை பெறுமா?

Doctor Vikatan: உடலுக்குப் பலம்  கிடைக்க, அதிகாலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடிக்கலாம் என்று சிலர் பரிந்துரைக்கிறார்கள். இது உண்மையிலேயே நல்லதுதானா அல்லது பாதுகாப்பானதுதானா?


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரம்யா

ஊட்டச்சத்து ஆலோசகர் ரம்யா

வெறும் வயிற்றில் பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடிப்பது உடலுக்கு வலிமையைத் தரும் என்பதில் உண்மையில்லை. மேலும், முட்டையைப் பச்சையாகக் குடிப்பதை மருத்துவர்களோ, ஊட்டச்சத்து ஆலோசகர்களோ பரிந்துரைப்பதும் இல்லை.

முட்டையில் உயர்தர புரதச்சத்து (Protein), வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆனால், அதைச் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் சமைத்த முட்டையைவிடக் கூடுதல் பலனோ அல்லது கூடுதல் வலிமையோ கிடைத்துவிடாது. பச்சை முட்டையை  உட்கொள்ளும்போது சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று (Salmonella Infection)   ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

 பச்சை முட்டையின் வெள்ளைப் பகுதியில் 'அவிடின்'   (Avidin)  என்ற புரதம் உள்ளது.  தொடர்ந்து இதை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது, அது உடலில் வைட்டமின் B7 அதாவது பயோடின் (Biotin) சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. பாலில் புரதம், கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைய உள்ளன. ஆனால், அது நுண்கிருமி நீக்கம்   (Pasteurized)  செய்யப்பட்டதாக அல்லது நன்கு காய்ச்சப்பட்டதாக இருக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் பாலும் முட்டையும் சேர்த்து எடுத்துக்கொள்வதால் சிறப்பு மருத்துவ நன்மைகள் எதுவும் ஏற்படுவதில்லை.

வெறும் வயிற்றில் பாலும் முட்டையும் சேர்த்து எடுத்துக்கொள்வதால் சிறப்பு மருத்துவ நன்மைகள் எதுவும் ஏற்படுவதில்லை. சத்தான சீரான உணவின் (Balanced Diet) ஒரு பகுதியாக, நன்கு சமைக்கப்பட்ட முட்டையை, பாஸ்சரைஸ் செய்யப்பட்ட அல்லது நன்கு காய்ச்சிய பாலுடன் சேர்த்து உட்கொள்வதே பாதுகாப்பானது.  

உடலை வலிமையாக வைத்துக்கொள்ள போதுமான அளவு புரதச்சத்து உட்கொள்ளுதல் (Adequate Protein Intake), வழக்கமான உடற்பயிற்சி, எதிர்ப்பாற்றலுக்கான பயிற்சிகள் (Resistance Training), நல்ல தூக்கம் போன்றவையே அடிப்படை.

ஊட்டச்சத்து ஆலோசகர் ரம்யா:

சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User