டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகி பாபுவின் 'ஆன் ஆர்டினரி மேன்' ஷூட்டிங்! பரபர அப்டேட்ஸ்!

Mar 6, 2026 - 14:00
 0
டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகி பாபுவின் 'ஆன் ஆர்டினரி மேன்'  ஷூட்டிங்! பரபர அப்டேட்ஸ்!

டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் 'an ordinary man'படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையான முறையில் தொடங்கியிருக்கிறது.

படப்பூஜையில்

ரவி மோகன் இப்போது விதவிதமான ஜானர்களில் நடித்து வருகிறார். ஃபேன்டஸியா 'ஜீனி', அரசியல் ஜானராக 'கராத்தே பாபு', ஜாம்பி 'மிருதன் 2', கலகலப்பான 'ப்ரோ கோட்' என அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தான் அவர் டைரக்டர் ஆக அறிமுகமாகும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தை தொடங்கியிருக்கிறார். ரவி மோகன் - யோகிபாபுயின் நட்பு 'கோமாளி' படத்தின் போதே நெருக்கமான நட்பாக ஆனது. 'கோமாளி' படத்தின் ஷூட்டிங்கில் தான் ரவி மோகனுக்கு யோகிபாபுவை இயக்கும் ஐடியாவும், கதையும் உருவாகியிருக்கிறது. அதன் படப்பிடிப்பின் போதே கதை லைனையும் சொல்லி விட்டார். கதையை கேட்டு நெகிழ்ந்த யோகிபாபு 'ஷூட்டிங் எப்போனு சொல்லுங்க, உடனே கால்ஷீட் தர்றேன் சார்' என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு ரவி மோகனுக்கான கமிட் மெண்ட்கள் இருந்ததாலே டைரக்ஷன் ஐடியாவை தள்ளி வைத்துவிட்டு நடிப்பதில் பிசியானார். தனது ரவிமோகன் ஸ்டூடியோஸ் மூலம் ரவி தயாரிக்கும் 'ப்ரோ கோட்' மற்றும் 'an ordinary man'இரண்டையுமே நெட்ஃபிளிக்ஸ் தான் வாங்கியிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ரவி மோகன்.

ரவிமோகன்

ரவியின் 'ப்ரோ கோட்' படத்தை 'டிக்கிலோனா' கார்த்திக் யோகி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரவியுடன் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன், ஷ்ரத்தா ச்ரீநாத், ச்ரி கௌரிப் ப்ரியா, யோகிபாபு என பலரும் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்கு இடையே தான் யோகிபாபுவின் படத்திற்கு வந்திருக்கிறார் ரவிமோகன்.

யோகிபாபு நடிக்கும் படத்தின் கதை ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையாகும். காமெடியும் எமோஷனலும் கலந்த கதை இது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தி.நகரில் தொடங்கியிருக்கிறது.

படப்பிடிப்பில்..

படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடக்கிறது. யோகிபாபு நடித்து வருகிறார். ஹீரோயின் மற்றும் முக்கிய பாத்திரங்கள் அடுத்த ஷெட்யூலில் இணைவார்கள் என்கிறார்கள். இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு மீண்டும் 'ப்ரோ கோட்' படத்திற்கு வருகிறார் ரவி.

எஸ்.ஜே.சூர்யா இப்போது 'கில்லர்', 'ஜெயிலர்2' படங்களில் நடித்து வருவதால் அவருக்காக காத்திருக்கும் இடைவெளியில் தான் யோகிபாபுவின் படத்தை தொடங்கிவிட்டார் ரவி மோகன் என்கிறார்கள். அதைப் போல யோகிபாபும் 300 படங்களை தாண்டிவிட்டார். அவரது 300வது படமாக 'அர்ஜூனன் பேர் பத்து' உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஆர்.ராஜ்மோகன் இயக்கியிருக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0