தருமபுரி: விவாத நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட திமுக - அதிமுக நிர்வாகிகள்! - முகம் சுழித்த பொதுமக்கள்!

Mar 4, 2026 - 10:30
 0
தருமபுரி: விவாத நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட திமுக - அதிமுக நிர்வாகிகள்! - முகம் சுழித்த பொதுமக்கள்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரியில் விவாத நிகழ்ச்சியை கடந்த 2 ஆம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.

கலவரமான நிகழ்ச்சி

இதில் தருமபுரி திமுக எம்.பி ஆ.மணி, முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன், நாதக மாநில ஒருஙகிணைப்பாளர் சந்தோஷ்குமார் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

தருமபுரி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிரபார்க்கும் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள், பழைய பேருந்து நிலையம் மாற்றப்பட்ட விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எம்.பி மணி, அன்பழகன் எம்.எல்.ஏ பதில் அளித்தனர்.

கே.பி.அன்பழகன்

அதுமட்டுமின்றி தங்கள் கட்சி ஆட்சி காலத்தை புகழ்ந்து பேசியதோடு மாறி மாறி விமர்சனத்தையும் வைத்து பேசியதால் வந்திருந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

'மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது காவிரி உபரி நீர்த் திட்டம் கொண்டுவரப்படும்' என்று அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் பேசும்போது, திமுக எம்.பி மணி குறுக்கிட்டுப்பேச, அதற்கு அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டபடி பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீச ஆரம்பித்தனர்.

ஸ்பாட்டுக்கு வந்த தருமபுரி எஸ்.பி

தொடர்ந்து திமுகவினரும் சத்தம் எழுப்பி சேர்களை தூக்கி வீச அந்த இடமே கூச்சல், குழப்பத்துடன் போர்க்களம் போலானது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டாலும், இரண்டு தரப்பையும் போலீசாரால் அமைதிபடுத்த முடியவில்லை. தகவல் தெரிந்து தருமபுரி எஸ்.பி மகேஸ்வரன் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியவர், இரண்டு கட்சியினரிடமும் கலைந்து செல்ல உத்தரவிட்டார். ஆனால் யாரும் செல்லாமல் அங்கேயே நின்றவர்கள், ஒருவழியாக 9 மணிக்கு மேல்தான் கலந்து சென்றனர்.

தருமபுரி எம்.பி ஆ.மணி

விவாத நிகழ்ச்சியில் ஆக்கப்பூர்வமாக பேசாமல் பொறுமை இல்லாமல் இரண்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading…

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0